fbpx
Homeபிற செய்திகள்காரிமங்கலம் அரசு மகளிர் கலை கல்லூரியில் உலக உணவு பாதுகாப்பு தினவிழா

காரிமங்கலம் அரசு மகளிர் கலை கல்லூரியில் உலக உணவு பாதுகாப்பு தினவிழா

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7 அன்று உலக உணவு பாதுகாப்புதினமாக அனுசரிக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் காரிமங்கலம் அரசு கலை கல்லூரி ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டியல் துறை இணைந்து கல்லூரி மாணவிகளிடையே உலக உணவு பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டியல் துறை தலைவர் முனைவர் த.செந்தில்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் சௌ.கீதா தலைமை தாங்கிப் பேசினார். காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கே.நந்தகோபால் மற்றும் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.

கல்லூரி முதல்வர் முனைவர் சௌ.கீதா பேசுகையில், இன்று நாம் நம் வீட்டளவில் அம்மாக்கள் சமைத்து தரும் சத்தான சுகாதாரமான உணவை தவிர்த்து கடைகளிலும் ஆன்லைனிலும் பாதுகாப்பற்ற உணவை வாங்கி தேவையற்ற உடல் உபாதைகளால் உடல் நலனில் அக்கறையின்றி படிப்பில் கவனம் குறைகிறோம்.

தவிர்க்க முடியாத தினத்தில் ஓரிருநாள் சுத்தம் சுகாதாரம் பேணும் உணவகங்களில் வாங்கி உண்ணலாம். ஆனால் எப்போதும் அதனை தொடரக்கூடாது, அன்னை தரும் உணவு நோய் நொடிகளை ஒரு போதும் உருவாக்காது.

உணவு பாதுகாப்பு, உணவு பொருள்கள் குறித்து நாம் அறிந்து நம் சமூகத்தில் தூதுவர்களாக நாம் செயல்பட்டு பாதுகாப்பான உணவு குறித்து விழிப்புணர்வு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

மாவட்ட நியமன அலுவலர் ஏ.பானுசுஜாதா,தன் சிறப்புரையில், உலக உணவு பாதுகாப்பு தினம் ஜுன் 7ம் தேதி சிறந்த ஆரோக்கியத்திற்கு, பாதுகாப்பான உணவு” “Safer food, better health” என்ற கருப்பொருளுடன் அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் உணவு மூலம் பரவும் நோய்களால் உயிரிழப்புகள் சதவீதம அதிகரித்து கொண்டே செல்வதால், அதனை தவிர்க்க நாம் உறுதி மேற்கொள்ள வேண்டும்.

அதற்கு பாதுகாப்பற்ற உணவை தடுப்பது, கண்டறிவது என்பதுடன் பாதுகாப்பான, சத்தான உணவினை உண்ண ஊக்குவிப்பதற்கு. தன் சுத்தம்“ சமையலறை, சுற்றுப்புறம் சுத்தம், பாதுகாப்பான அனைத்து வழிகளையும் பின்பற்றுதல்” “கலப்படமில்லா உணவை தேர்வு செய்தல்” “விபரச் சீட்டை பார்ப்பது வழிமுறைகள் கடைபிடிப்பதாலும் நுகர்வோர் விற்பனையாளர் தயாரிப்பாளர் இதனை தவறாது பின்பற்றினாலே தரமான சத்தான பாதுகாப்பான உணவு சிறந்த ஆரோக்கியம் உருவாக்கும் என்றார்.

காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கே.நந்தகோபால் “உணவு பாதுகாப்பானதாக இல்லையென்றால் அது உணவே அல்ல” என்று தொடங்கி உணவு பொருள்களில், பொட்டலமிடப்பட்ட பொருள்களில் காணவேண்டிய அம்சங்களான உணவு பொருள் பெயர், தயாரிப்பாளர் முகவரி, தயாரிப்பு மற்றும் முடிவு தேதி, எடை, உணவு பாதுகாப்பு உரிமம் எண். சைவ, அசைவ குறியீடு மற்றும் உட்காரணிகள், ஊட்டச்சத்து தகவல்கள், நுகர்வோர் தொடர்பு எண் ஆகியன கண்டிப்பாக ஒவ்வொரு உணவு பொருளிலும் காண வேண்டும் என விழிப்புணர்வுடன், உணவு பொருள்களில் முக்கியமாக தேன், பால், தேயிலை, மிளகு, வெல்லம், மசாலா பொடிகள் உள்ளிட்ட பல்வகையான உணவு பொருள்களில் பொட்டலமிடப்பட்ட பொருள்கள் என வீட்டளவிலேயே எளிதில் கலப்படம் கண்டறிதல் குறித்து செயல் விளக்கம் நேரடியாக உணவு பொருள்களை கொண்டு செய்து காட்டினார்.

இறுதியாக நாட்டின் பாதுகாப்பான உணவு ஒவ்வொருவருக்கும் கிடைக்கவும், உணவு பாதுகாப்பு குறித்து அனைவருக்கும் உணர்த்துவதிலும் எனது சொந்த உணவு பழக்க வழக்கங்களில் சுத்தம் சுகாதாரமாக இருக்க உறுதி செய்வதுடன் கலப்படத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து போராடுவேன் ஒவ்வொருவருக்கும் ஆரோக்கிய உணவு கிடைக்க அனைத்து முயற்சிகளும் எடுப்பேன் என உணவு பாதுகாப்பு தினம் உறுதி மொழி எடுக்கப்பட்டது.

உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி, துறை பேராசிரியர்கள், 700க்கும் மேற்பட்ட மாணவியர்கள் பங்கேற்றனர். மாணவி சரண்யா நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img