fbpx
Homeபிற செய்திகள்உலக சர்க்கரை நோய் தினம்: விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

உலக சர்க்கரை நோய் தினம்: விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில் உள்ள மக்களின் அதிமுக்கிய பிரச்சனையாகவும், நோயா கவும் சர்க்கரை நோய் பார்க்கப்படுகிறது.
கணினி, தொடுதிரை செல்பேசி மட்டுமே வாழ்க்கையென கொண்டிருக்கும் இந்த காலத்தில் பெரும்பாலா னோர் இந்த சர்க்கரை (நீரிழிவு ) நோயால் பாதிக் கப்பட்டு வருகின்றனர்.

இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதி உலக சர்க்கரை நோய் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்நாளில் பல்வேறு விதங்களில் மக்களுக்கு சர்க்கரை நோய் பற்றியும் உடற்பயிற்சி செய்வ தனால் சர்க்கரை நோய் கட்டுபடுத்துவது குறித் தும் விழிப்புணர்வு ஏற்ப டுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்படும் டாக்டர் எஸ்.பி.டயாபடிக் பவுண்டேசன் சார்பாக சைக்கிள் பேரணி நடை பெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சர்க்க ரை நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மருத்துவமனை முன்பாக துவங்கிய இந்த சைக்கிள் பேரணி ஆர்.எஸ். புரம், தடாகம் சாலை என முக்கிய சாலைகள் வழியாக மீண்டும் மருத்துவமனை முன்பாக நிறைவடைந்தது.

சர்க்கரை நோய் விழிப்புணர்வு

இந்த சர்க்கரை நோய் விழிப்புணர்வு குறித்து பேசிய சர்க்கரை நோய் மருத்துவர் சுகுணாபிரியா கூறும்போது தற்போதுள்ள கணினி வாழ்க்கை மற்றும் செல்போன் பயன்பாடுகளால் மக்களின் உடல் உழைப்பு என்பது குறைந் ததன் காரணமாகவே அதிகளவிலான மக்கள் உடல் பருமன் ஏற்பட்டு சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பாக தற்போது அதிகளவில் குழந்தைகள் இந்த நோயால் பாதிப்பதாகவும், இதனை கட்டுப்படுத்த அனைவரும் கண்டிப்பாக ஏதாவது உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img