fbpx
Homeபிற செய்திகள்உதகை வட்டார போக்குவரத்து அலுவலர் திடீர் ஆய்வு

உதகை வட்டார போக்குவரத்து அலுவலர் திடீர் ஆய்வு

கொரோனா, ஒமைக் ரான் வைரஸ் பரவல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பல்வேறு முன் னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

நீலகிரி மாவட்டத் தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் பொது மக்களுக்கான நோய் தடுப்பு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உதகை வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் நகரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்

பொது சிற்றுந்துகளில் ஆய்வை மேற்கொண்ட அவர் நடத்துனர் ஓட்டுனரிடம் முக கவசம் அணிதல் பேருந்தில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா என கேட்டறிந்து பார்வையிட்டார். பின்பு அரசு பேருந்துகளிலும் அனைவரும் முககவசம் அணிந்துள்ளனரா என பார்வையிட்டு ஓட்டுனர் நடத்துனர்களுக்கு அறி வுரைகளை வழங்கினார்

கனரக வாகனங்களை யும் ஆய்வு செய்தார் ஆட் டோ ஓட்டுநர்கள் சுற்றுலா பயணிகள், சுற் றுலா வாகன ஓட்டிகள் ஆகியோருக்கு முக கவசம் வழங்கினார் பின்பு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார் வழி நெறிமுறைகளை கடை பிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இந்த ஆய்வின்போது ஆய்வாளர் நிலை 1 குலோத்துங்கன் ஆகி யோர் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img