fbpx
Homeதலையங்கம்உணவுப் பஞ்சம் ஏற்படும்

உணவுப் பஞ்சம் ஏற்படும்

பெட்ரோல், டீசலைப் போல மிக விரைவில் வெப்பமடையும் திறன் எத்தனாலுக்கு குறைவு. இதனால் குளிர்காலத்தில் கரகாட்டக்காரன் படத்தில் வரும் கார் போல வேகமாக வாகனங்களை இயக்க முடியாது. மைலேஜ் குறைவாகவே கிடைக்கும் என்கின்றனர்.

தற்போதைய பெட்ரோலில் அதிகபட்சமாக 8.5 சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது. தற்போது இதை 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும் முடிவில் ஒன்றிய அரசு உள்ளது. அதிகபட்சம் 85 சதவீதம் வரை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது.

எத்தனால் பயன்பாட்டை அதிகரிக்க, அதிகரிக்க உணவுப் பற்றாக்குறை அதிகரிக்கும் என சர்வதேச உணவு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தற்போதைய நிலவரப்படி அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் எத்தனால் எரிபொருளைப் பயன்படுத்தி வருகின்றன.

இதனால் அங்கு உணவு – எரிபொருள் மோதல் உருவாகியுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே பொருளாதார நெருக்கடி வாட்டி வதைத்து வருகிறது. வேளாண் திருத்த சட்டங்களால் விவசாயிகள் பல்வேறு நெருக்கடிகளுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில் விளையும் பொருட்களையும் மாற்று திட்டத்துக்கு பயன்படுத்தினால் இந்தியாவில் மாபெரும் உணவு பஞ்சம் ஏற்படும் சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் கணிக்கப்படுகிறது.

எனவே ஒன்றிய அரசு மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை ஊக்குவிக்கலாம். அல்லது உணவு நெருக்கடி ஏற்படாத வண்ணம் மாற்று எரிபொருள் திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் இறங்குவதே நல்லது.

படிக்க வேண்டும்

spot_img