fbpx
Homeபிற செய்திகள்உடையவர் திருவடி அறக்கட்டளை சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் உபகரணங்கள் வழங்கப்பட்டது

உடையவர் திருவடி அறக்கட்டளை சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் உபகரணங்கள் வழங்கப்பட்டது

ஸ்ரீ ராமானுஜர் அறக்கட்டளை மற்றும் அதன் சார்பு நிறுவனமான உடையவர் திருவடி அறக்கட்டளை இணைந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தலைசீமியா குழந்தைகளுக்காக 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அமுதவல்லி, ஆர்எம்ஓ டாக்டர் காந்தி, டாக்டர் சாந்தி, குழந்தை கள் நலத்துறை தலைவர் டாக்டர் ரமேஷ் பாபு, இணை பேராசிரியர் டாக்டர் பாலாஜி, உதவி பேராசிரியர்கள் டாக்டர் சுஜிதா, டாக்டர் சைலஜா உள்ளிட்டோர் பங்கேற் றனர். ஸ்ரீ ராமானுஜர் அறக்கட்டளை மற்றும் அதன் சார்பு நிறுவனமான உடையவர் திருவடி அறக்கட்டளையின் பெரிய வர்கள் உபகரணங்களை வழங்கி துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மூத்த உறுப்பினர்கள் மதனாபாய், நெல்லியம்மாள், கண்ணம் மாள், ஆனந்தவல்லி ஆண்டாள், பத்மாவதி அம்மாள், பஞ்சவர்ணம், மூத்த அறக்கட்டளை உறுப்பினர்கள் ஸ்ரீ முனி வாகன ராமானுஜ ஜீயர் சுவாமிகள், ஜீயர் ஜெயராம பாகவதர், தேவராஜ் செட்டி, புருஷோத்தமன், உடையவர் திருவடி அறக் கட்டளையின் ஸ்தாபகர் மேலாண்மை அறங்காவலர் ஏவிஆர் ராஜா மற்றும் அறங்காவலர் மகாதேவன் குழந்தைகள் சரண்யா, சந்துரு மகாலட்சுமி ஆனந்த லட்சுமி அனகா, அவந்திகா மற்றும் ராமானு ஜம் டிரஸ்ட் சார்பில் உடை யவர் திருவடி டிரஸ்ட் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img