கோவை பாலக்காடு சாலை, நவக்கரையில் அமைந்துள்ள ஈசா பொறியியல் கல்லூரியில், 10வது பட்டமளிப்புவிழா, கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது.
ஈசா பொறியியல் கல்லூரியின் நிறுவனத் தலைவர் மறைந்த டி.டி.ஈஸ்வரமூர்த்தி புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து தலைவர் டி.ஈ.சுஜாதா தலைமை தாங்கி,பட்டமளிப்புவிழாவை துவக்கி வைத்தார்.
தலைமை செயல் அலுவலர்கள் டி.ஈ.அஜித், தலைமை நடவடிக்கை அதிகாரி டி.ஈ ஆதர்ஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரி முதல்வர் ராபர்ட் கென்னடி அனைவரையும் வரவேற்று,கல்லூரி ஆண்டறிக்கையினை வாசித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக சேலம் விநாயக மிஷின் பல்கலைக் கழகம் முன்னாள் துணைவேந்தர் முனைவர் வி.ஆர்.ராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
பட்டங்களை பெற்று கொண்ட மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் ராபர்ட் கென்னடி உறுதி மொழியினை வாசித்தார். மாணவர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
அண்ணா பல்கலைக்கழக தரசான்றிதழ்
விழாவில் அண்ணா பல்கலைக்கழக தரசான்றிதழ் 2 வது இடத்திற்கான பட்டங்களை இளங்கலை பெட்ரோலியத்துறை மாணவர்கள் எஸ்.என். சர்வேஷ், 3 வது இடத்துக்கான பட்டங்களை முதுநிலை மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை மாணவர் சி.சிலம்பரசன் மற்றும் மாணவர் பிபின் பேபியும் 4 வது இடத்துக்கான தரவரிசை பட்டத்தை முதுகலை மெக்கானிக்கல் துறை மாணவர் சிபின் ராஜ், 21 வது இடத்துக்கான தரச் சான்றிதழை மேலாண்மை துறை மாணவர் ஆர் மானிஷ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
மேலும் இவர்களுக்கு ரொக்கப்பரிசு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் அனைத்து துறைகளிலும் உள்ள 793 மாணவ,மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் துணை முதல்வர் முனைவர் சுனிலா, ஜார்ஜ் கல்லூரி நிர்வாக அதிகாரி ஸ்ரீகாந்த் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.