fbpx
Homeதலையங்கம்இலங்கையை மீட்க என்ன தான் தீர்வு?

இலங்கையை மீட்க என்ன தான் தீர்வு?

இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.

தங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியான நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலக வேண்டுமென பொதுமக்கள் அமைதியாகப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், ராஜபக்சே பதவி விலகியதன் மூலம் அவரது ஒரு கோரிக்கை நிறைவேறி விட்டது.

ஆனால் போராடும் பொதுமக்களுக்கு எதிராக மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் களமிறங்கியதால் வன்முறை வெடித்து இலங்கை ரத்தக்களறியாகி விட்டது. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மர்மகும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மகிந்த ராஜபக்சேவின் வீட்டை தீ வைத்துக் கொளுத்தியதால் இலங்கையில் பெரிய அளவில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் ராஜபக்சே சகோதரர்களின் தந்தை டி.ஏ. ராஜபக்சேவின் சிலையை தகர்த்துள்ளனர். நாடு முழுதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இடையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகள் பிரதமர் பதவியை ஏற்க மறுத்து விட்ட நிலையில், அதிபரும் அங்கே ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

அங்கு அதிபரை நீக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் இறங்கலாம். ஆனால் அவையில் 3ல் இரண்டு பங்கு எம்பிக்கள் சேர்ந்து அதிபரை நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

ஆனால் இது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அதே சமயம் அதிபர் தானாக பதவி விலகினால் பொதுத்தேர்தல் நடக்கும். ஆனால் புதிதாக தேர்தல் நடத்த பொருளாதார நெருக்கடி குறுக்கே நிற்கும்.

இப்படி பல பிரச்சனைகள் இருப்பதால். அங்கு மொத்தமாக அதிபர் பதவியையே நீக்க வேண்டும் என்று அங்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் இதுவும் நடக்குமா என்பது சந்தேகம்தான். எனென்றால் கோத்தபய ராஜபக்சே, அதிபர் பதவியை இழக்க ஒருபோதும் முன்வர மாட்டார்.

தற்போது வன்முறையை ஒடுக்க முப்படை களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அமைதி காக்கும்படி மக்களை கோத்தபய ராஜபக்சே வேண்டிக் கொண்டுள்ளார். கோரிக்கையே அவர் பதவி விலக வேண்டும் என்பது தானே. அவரது வேண்டுகோளுக்கு போராடும் மக்கள் செவி சாய்ப் பார்களா?

இலங்கை என்ன ஆகும் என்பதே பெரும் கேள்விக்குறியாகி விட்டது. என்ன நடக்கப்போகிறது அங்கே? நல்லதே நடக்கட்டும்!

படிக்க வேண்டும்

spot_img