கோவையில் உள்ள ஆர்யா வைத்திய மருந்தகம், ஏவிபி குழுமத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் மறைந்த டாக்டர் பி.ஆர்.கிருஷ்ணகுமாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஒரு வாரம் தொடர் கருந்தரங்கம் நடந்தது.
இந்த மெய்நிகர் நிகழ்வில் கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்றனர்.
ஆயுர்வேதத்தை உலகமயமாக்குவதற்கான டாக்டர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் எடுத்த முயற்சிகள் குறித்த,, ஓனஸ் ரீடிபைனிங் தி பிளாக் மேஜிக் என்ற தலைப்பிலான ஆவணப்படத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார்.
கோட்டக்கல் ஏவிஎல் நிர்வாக அறங்காவலர் டாக்டர் பி.மாதவன்குட்டி கௌரவ விருந்தினராக பங்கேற்றார்.ஆர்ய வைத்திய மருந்தகத்தின் நிர்வாக இயக்குநர் சி.தேவதாய் வாரியார் தொடக்க உரையாற்றினார்.
பல்வேறு துறையைச் சார்ந்த டாக்டர் தியாகராஜன், டாக்டர் கே.ஜி.ரவீந்திரன், டாக்டர் டி.ராமநாதன், ரஞ்சித் புரானிக், டாக்டர் சாஜி குமார், ரவுனி பணிக்கர், டாக்டர் சசிதரன், டாக்டர் ரமேஷ் ஆர் வாரியார், டாக்டர் ஜெயதேவன், டாக்டர் பிரசாந்த் சூரு, டாக்டர் அசிட் குமார் பாண்டியா, டாக்டர் பிரசாத், டாக்டர் சர்தேஷ்முக், டாக்டர் சந்தியா மன்னத், நாராயணன் குட்டி மற்றும் ஆர்ய வைத்திய குழுமத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர்.



