fbpx
Homeபிற செய்திகள்ஆயத்த ஆடை, ஜவுளி பொருட்களின் ஏற்றுமதி சலுகை 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஆயத்த ஆடை, ஜவுளி பொருட்களின் ஏற்றுமதி சலுகை 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருட்களின் ஏற்றுமதி சலுகைகளை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீடித்ததற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு சைமா நன்றி தெரிவித்துள்ளது.

இந்திய ஜவுளித் தொழில் பன்னாட்டு சந்தையில் போட்டியிட ஒரு சமதளம் உருவாக்கும் முயற்சியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பல்வேறு முற்போக்கான நடைமு¬ றகளை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் RoSCTL திட்டத்தின் கீழ் இறக்குமதி வரி, சரக்கு மற்றும் சேவை வரிகளை தவிர, இதர மறைமுக வரிகளை திருப்பி தருவதன் மூலம், இந்திய ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதியாளர்கள் வரி ஏற்றுமதியை தவிர்த்து சந்தை போட்டி திறனை அதிகரிக்க வழிவகை செய்கிறது.

ஏற்றுமதி ஜவுளிப் பொருட்கள் மீதான மாநில மற்றும் மறைமுக உள்ளீட்டு வரிகளை திருப்பி கொடுக்கும் வகையில் 2016-ம் ஆண்டில் RoSCTL என்ற திட்டத்தை முதன் முறையாக அரசு அறிவித்தது.

மார்ச் 2019-ம் ஆண்டில் இச்சலுகை களை உயர்த்தி RoSCTL என்ற திட்டத்தை அறிவித்ததன் மூலம் இந்திய ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருட்களின் ஏற்றுமதி ஸ்திரத்தன்மை ஆதிகரித்தது.

2021-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் RoDTEP என்ற புதிய திட்டம் அறிவிக்கப் பட்டதால் இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

எதிர்பாராத கொரோனா காரணமாக நலிவடைந்துள்ள ஜவுளித் தொழிலை ஊக்குவிக்கும் வகையிலும் பன்னாட்டு சந்தையில் உருவாகும் புதிய வாய்ப்புகளை தொழில் துறையினர் பெரும் வகையிலும் RoSCTLதொடர வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் அரசை வலியுறுத்தி வந்தனர்.

பிரதமர் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளிக்கான RoSCTLதிட்டத்தை மார்ச் 31, 2024-ம் ஆண்டு வரை நீட்டித்து அறிவித்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img