கோவையில் ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் தேசிய பொதுச்செயலாளர் ஜி.வி.மணிமாறன் தலைமை யில் நடைபெற்றது.
மாநில பொதுச் செயலாளர் சி.பழனிச்சாமி, மாநில துணை தலைவர் கார்த் திக், தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் டாக்டர் சிவா, தலித் சேனா தலைவர் உக்கடம் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநிலம் முழுவதும் ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியை பலப்படுத்த அதிக அளவில் உறுப்பினர் சேர்ப்பது, வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பின்னர் இதுகுறித்து தேசிய தலைவர் ஜி. வி.மணிமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசும் மாநில அரசும் இலங்கைக்கு பல் வேறு வகையிலும் உதவிகள் புரிந்து வருகிறது.
ஆனால் இலங்கை கடற்படை யினர் தமிழக மீனவர்கள் 18 பேரை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
ஆன்லைன் ரம்மியால் இளைஞர்கள் பலியாகி வருகின்றனர். அதை தடைசெய்ய வேண்டும். இதன் விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் சம்பளமாக பெற்ற பணத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும். மேற்கண்டவாறு அவர் கூறினார்.



