பழங்குடியினர் சாதி சான்றிதழ் பெற ஆன்லைனில் தான் விண்ணப்பிக்க வேண்டும் என்ற முறையை ரத்து செய்யவேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இதுதொடர்பாக சேலத்தில் நடைபெற்ற சங்கத்தின் மாநில நிர்வாகிகள் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு மலை வாழ்மக்கள் சங்கத்தின் மாநில செயற்குழுகூட்டம் சேலம் மாவட்டத்தில், மாநில தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.டில்லிபாபு தலைமையில் நடைபெற்றது.
பழங்குடியினர் சாதி சான்றிதழ் பெற ஆன்லைனில் தான் விண்ணப்பிக்க வேண்டும் என்ற முறையை ரத்து செய்யவேண்டும், கொண்டாரெட்டி பழங்குடிமக்களுக்கு பழங்குடி பட்டியல் 12-வது வரிசையில் இடம் பெற்றுள்ள பழங்குடி இனத்தை சார்ந்த ஒட்டு மொத்த கொண்டாரெட்டி பழங்குடி மக்கள் மீது மூன்றாம் நபர்களால் அளிக்கப்படும் புகார்களின் பேரில் விசாரணைக்கு உத்தரவிட்டது சட்டத்திற்கு புறம்பானது. எனவே விசாரனையை திரும்பப்பெற வேண்டும்.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில், 8 சதம் உள்ள பழங்குடி மக்களுக்கென்று அறிக்கையில் இடம் பெறாதது ஒட்டுமொத்த பழங்குடிமக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
இதை கண்டித்து வரும் 15-ம் தேதி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம், மலைவாழ் மக்கள் சங்க மாநில துணைசெயலாளர்இரா.சரவணன், மாநில பொ ருளாளர் எ.பொன்னுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



