fbpx
Homeபிற செய்திகள்ஆதிதிராவிடர், பழங்குடி நலத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்

ஆதிதிராவிடர், பழங்குடி நலத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (ஆக.17) நடந்தது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்கு டியினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி எஸ்.ஜவகர் தலைமை தாங்கி பேசியதாவது:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் உயர்வடையச் செய்வதன் மூலம், சமத்துவ சமுதாயத்தினை உரு வாக்கிடும் நோக்குடன் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களைசென்று சேரும் வகையிலும், விரைவாக பயனாளிகளுக்கு நலத்திட்டங் களை கொண்டு சேர்த்திடவும், அரசின் திட்டங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை பள்ளிகள், மேல்நிலைப்பள்ளி, பழங்குடியினர் உண்டு உறை விடப்பள்ளிகளில் மாணவ, மாண விகள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள், மற்ற பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களைப் போலவே அதிக அளவில் மதிப்பெண் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிப்படிப்பை முடித்து வெளியில் சென்று உயர்கல்வி பயிலும் மாணவர்கள் போதிய வழிகாட்டுதலை வழங்க வேண் டும்.

ஏற்கனவே இப்பள்ளிக ளில் பயின்று தற்போது உயர்ந்த நிலையில் உள்ளவர்களை அழைத்து இவர்களிடத்தில் உரையாற்ற செய்வதன் மூலம், தன்னம்பிக்கையை உருவாக்கி, அவர்களும் கல்வியில் சிறந்தவர் களாக விளங்கி, பொருளாதார உயர்ந்த நிலையி னை அடைய பயனுள்ளதாக அமையும்.

தாட்கோ திட்டத்தின் கீழ் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம்/வணிகத்தை உருவாக்க பொரு ளாதார உதவி, மருத்துவம் மற்றும் அதனைச் சார்ந்த சிகிச்சையகம், ஆதிதிராவிடர் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான திட்டங் கள் உள்ளிட்ட பல்வேறு திட் டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்தகைய திட் டங்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு முழுமையாக சென் றடையும் வகையில் துறை அலு வலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிடவேண்டும். இவ்வாறு தென்காசி எஸ். ஜவகர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், செயற்பொறியாளர் தாட்கோ (கோவை மண்டலம்) சரஸ்வதி, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்கள், மாவட்ட மேலாளர்கள் (தாட்கோ) கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img