fbpx
Homeபிற செய்திகள்ஆக. 6-ம் தேதி முதல் ஜம்முவில் தேசிய விளையாட்டு போட்டிகள்

ஆக. 6-ம் தேதி முதல் ஜம்முவில் தேசிய விளையாட்டு போட்டிகள்

தமிழ்நாடு யூத் அண்ட் ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அசோசியேசன் சார்பாக 2-வது மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள், ஈரோடு செங்குந்தர் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றன.

தடகளம், கூடைப்பந்து, கையுந்து பந்து, கபடி உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற்றன.

மாவட்டங்களிலிருந்து விளையாட்டு வீரர்கள், முகக் கவசம் அணிந்து பாதுகாப்போடு கலந்து கொண்டனர்.

போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், ஜம்முவில் வரும் 6 முதல் 8-ம் தேதி வரை நடைபெறும், நான்காவது தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வார்கள்.

இத்தகவலை தமிழ்நாடு யூத் அண்ட் ஸ்போட்ஸ் டெவலப்மென்ட் அசோசியேசன் மாநில செயலாளர் நாகராஜ் தெரிவித்தார்.

அப்போது, மாநில ஒருங்கிணைப்பாளர் தேவகாந்தன், மாநில துணைச் செயலாளர் மணியரசன், துணை ஒருங்கிணைப்பாளர் பிரி யதர்ஷினி உள்ளிட்டோர் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img