fbpx
Homeபிற செய்திகள்வருமான வரி புதிய வலைதளத்தில் சிக்கல்கள் தீர்வு காண வலியுறுத்தி முதல்வருக்கு மனு

வருமான வரி புதிய வலைதளத்தில் சிக்கல்கள் தீர்வு காண வலியுறுத்தி முதல்வருக்கு மனு

வருமான வரி புதிய வலை தளத்தில் ஏற்பட்டு வரும் சிக்கல்களை களையுமாறு, வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆடிட்டர் இரா. ரவிச்சந்திரன், முதல்வர், நிதி அமைச்சருக்கு மனு அனுப்பி உள்ளார்.
மனுவில் கூறியிருப்பதாவது:

வருமானவரி புதிய இணையதளம் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை சரியாக முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை.

இதில் பல்வேறு பிரச்சனைகளை ஆடிட்டர்களும் வர்த்தகர்களும் பொதுமக்களும் சந்தித்து வருகின்றனர்.

நிதி ஆண்டு 2020-21 சம்பளம் பெறுபவர், ஓய்வூதியதாரர், தணிக்கைக்கு உட்படாத தனிநபர் வருமான வரி படிவம் தாக்கல் செய்ய கடைசி நாள் 31.7.2021 என்பதை மத்திய அரசு 30.9.2021 வரை காலநீட்டிப்பு செய்திருக்கிறது,
10கி படிவம் அதன் இணையதளத்தில் காட்டப்படவில்லை.

முந்தைய வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட படிவங்கள் பெரும்பாலானவை செய லாக்கப்படவில்லை மற்றும் சிறிய தொகையை கூட ரீபண்ட் தரவில்லை.

புதிய வருமான வரி தளத்தில் ஐ டி ஆர் 4 படிவம் ஜூலை 2021-ல் தாக்கல் செய் யப்பட்டபோது, ஒப்புதல் படிவத்தில் ஒப்புதல் நாள் 30.12.2021 என்று தவறுதலாக இடம்பெற்றுள்ளது.

இதுவே புதிய வரி வருமான வலைதளத்தில் குழப்பத்திற்கு ஒரு உதாரணம்.
வருமான வரி வல்லுனர்களை, இந்த புதிய இணையதளத்தில் தனியாக காட்டவில்லை. பட்டய கணக்காளர் மட்டுமே காட் டப்பட்டுள்ளது.

மற்றும் சேவை முகவராக கருதப்படுகிறது. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வரி வல்லுநர்களுக்கு தனி உள்நுழை அனுமதி வழங்கப்பட வேண்டும்.

கால நீட்டிப்பு மார்ச் 2022 வரை புதிய வருமான வரி தளத்தில் ரிட்டன் தாக்கல் சரிவர செயல்படுத்தாது உள்ளதால், அனைத்து ரிட்டன் தாக்கல் செய்வதும், டிரஸ்ட் ரீ-ரிஜிஸ்ட்ரேஷன் செய்வதும், இ ஸ்க்ரூட்டினி, பழைய வருடத்திற்கான ஆணை பிறப்பிப்பது வருமானவரி டிடிஎஸ் நிதியாண்டு 2021-22-ம் ஆண்டிற்கான முதல் மற்றும் இரண்டாம் காலாண்டிற்கான இடிடிஎஸ் ரிட்டர்ன் தாக்கல்- மார்ச் 2022 வரை கால நீட்டிப்பினை செய்ய வேண்டும்.

ஓய்வூதியதாரர்கள் கரு வூலத்திலிருந்து வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டு, அதற்கான படிவத்தை ஆன்லைன் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால் தற்போது அதன் மூலம் பெறப்படும் ஓய்வூதியம் மற்றும் வரி பிடித்தம் அக்டோபர் 2020 வரை மட்டுமே பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

ஒவ்வொரு பள்ளிகள் மூலமாக ஆசிரியர்களுக்கு வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டு, கருவூலத்தில் வருமான வரி பிடித்தம் முதல் காலாண்டில், இந்த 2021-22-ம் நிதி ஆண்டிற்கு, இதுவரை ரிட்டன் தாக்கல் செய்யப்படாமல் உள்ளதால், அந்த பணம் (வருமான வரி பிடித்த பணம்) யாருடைய கணக்கிற்கும் வரவில்லை. கருவூல வலைதளத்தில் அதுவும் இதுநாள் வரை காண்பிக்கப்படவில்லை.

அமைச்சர்கள், அதிகாரிகள் தலையிட்டு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். கருவூல வலைதளப் பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட துறையினருடன் கலந்து ஆலோசித்து முதல்வர் தீர்வுகாண வேண்டும்.இவ்வாறுமனுவில் கூறப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img