Homeபிற செய்திகள்அவிநாசிலிங்கம் உயர்கல்வி நிறுவனத்தில் சர்வதேச யோகா தினம்

அவிநாசிலிங்கம் உயர்கல்வி நிறுவனத்தில் சர்வதேச யோகா தினம்

அவிநாசிலிங்கம் உயர்கல்வி நிறுவனத்தில் சர்வதேச யோகா தினம் உயர் கல்வி நிறுவனத்தின் இரண்டாம் வளாகமான பன்னீர்மடையில் கொண்டாடப்பட்டது.
சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவியர் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற யோக மகரிஷி சேவபூர் மாணிக்கம், சில யோக நுணுக்கங்களை பயிற்று வித்தார். உடற்கல்வி துறைத் தலை வர் வனிதாமணி வரவேற்றார்.

வேந்தர் முனைவர் எஸ்.பி.தியாகராஜன் தலைமை தாங்கி பேசும் போது, யோக பயிற்சி செய்வ தின் முக்கியத்துவத்தை எடுத்து ரைத்தார். துணைவேந்தர் முனைவர் பாரதி ஹரி சங்கர், யோகா வின் தொன்மையையும் அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

முனைவர் சண்முக வள்ளி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.
முனைவர் சரவணன் பிரபா நன்றி கூறினார்.

சிறப்பு அம்சமாக பல்க லைக்கழக ஆசிரியர்கள் கடந்த ஒரு மாத காலமாக இணைய வழியில் சூரிய நமஸ்காரப் பயிற்சி பெற்று, ஒரு மணி நேரம் 15 நிமிடத்தில் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்து சாதனை படைத்தனர்.

முனைவர் கீதா, முனைவர் சுமதி, மகாலட்சுமி, முனைவர் சாந்தாமணி இணைப் பேராசிரியர் சிவகாமி, முனைவர் கலைச்செல்வி உள் ளிட்டோருக்கு சாதனைப் பெண்களுக்கான விருது வழங்கப்பட்டன.

விழாவினை உயர் கல்வி நிறுவனத்தின் உடற்கல்வி துறை மற்றும் யோகா துறை இணைந்து சிறப்பாக நடத் தியது.

படிக்க வேண்டும்

spot_img