மாநில அளவிலான கால்பந்து போட்டியை அலகுமலை கிரீன் பார்க் ஸ்மார்ட் ஸ்கூல், தாஸ் சர்க்கர் இணைந்து, அலகுமலை கிரீன் பார்க் பள்ளி மைதானத்தில் நடத்தியது.கன்னியாகுமரி, நெய்வேலி, விருதுநகர், நெய்வேலி, திண்டுக்கல், தஞ்சாவூர், ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மா வட்டங்களில் இருந்து மொத்தம் 30 அணிகள் பங்கேற்றன.
பரிசளிப்பு விழாவில், திருப்பூர் மேயர் என்.தினேஷ்குமார், பொங்கலூர் பஞ்சாயத்து யுனியன் சேர்மன்எஸ்.குமார், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் எம்.முருகுவேந் தன்உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத் தொகை, கோப்பை வழங்கப்பட்டது.தாளாளர் ஆ.அலோசியஸ், ஒருங்கிணைப்பாளர் ஏ.அறிவரசன் ஆகியோர் இத்தகவலைத் தெரிவித் தனர்.



