fbpx
Homeபிற செய்திகள்அரிய இருதய நோயால் பாதிப்படைந்த மூதாட்டிக்கு அறுவை சிகிச்சையின்றி குணப்படுத்தி கே.எம்.சி.எச். சாதனை

அரிய இருதய நோயால் பாதிப்படைந்த மூதாட்டிக்கு அறுவை சிகிச்சையின்றி குணப்படுத்தி கே.எம்.சி.எச். சாதனை

அரிய இருதய நோயால் பாதிப்படைந்த 70 வயது மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் கே.எம்.சி.எச். மருத்துவர்கள் குணப்படுத்தி சாதனை புரிந்தனர்.

குறைந்த ரத்த அழுத்தத்துடன் கூடிய, தீவிர மாரடைப்புடன் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (கே.எம்.சி.எச்.) 70 வயதான மூதாட்டி அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்ததில், இதயத்தின் பக்கவாட்டில் உள்ள தசையில் சிதைவு இருப்பது தெரிந்தது. இது ஒரு அரிய வகையான இருதய நோய்.

இப்படிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டால், உடனடி உயிரிழப்புக்கு வழிவகுக்கும். இந்த சிதைவு இருதயத்தின் உட்பகுதியில் ஏற்பட்டதால், அதிர்ஷ்டவசமாக வெளிப்பகுதியில் உள்ள மெல்லிய தோல் ரத்தக்கசிவு வெளியே ஏற்படா மல் இருக்க உதவியது.

உடனடியாக அந்த பெண்மணிக்கு அவசர இருதய அறுவை சிகிச்சை செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது.

ஆனால், கட்டுப்பாடற்ற சர்க்கரை அளவு, உடல் பருமன், பலவீனமான இருதய நாளங்களை கருத்தில் கொண்டு அறுவை சிகிச்சைக்கு அவர் உகந்தவர் அல்ல என்று கண்டறியப்பட்டது.

அவருக்கு அறுவை சிகிச்சை முறையை தவிர்த்து, நவீன தொழில்நுட்பத்துடன் சிகிச்சை அளிக்க மருத்துவமனையின் இருதயவியல் துறை வல்லுநர்களான டாக்டர்கள் தாமஸ் அலெக்சாண்டர், பாலகுமாரன், பிரசாந்த் வைஜயநாத், கண்ணன், காப்பியன் ஆகியோர் எடுத்துரைத்தனர்.

இருதயத்தில் உள்ள துளைகளை மூடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பொத்தான் போன்ற கருவியை பயன்படுத்தி சிதைவை மூடும் முயற்சியை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

இவரது இருதய துளை மிகப் பெரியதாக இருந்தது. எனவே கூடுதலாக பெரிய ஏஎஸ்டி கருவி பயன்படுத்தி பிளவு முழுவதையும் வெற்றிகரமாக சரிசெய்து, நோயாளியை மருத்துவமனையில் இருந்து மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் செய்ய முடிந்தது.

இது போன்ற பெரிய துளையை 40 எம்எம் ஏஎஸ்டி கருவி கொண்டு சிகிச்சை அளித்தது இதுவே முதன் முறை.

இதுகுறித்து கே.எம்.சி.எச். தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி கூறுகையில், திறமை மிக்க மருத்துவ வல்லுநர்கள், அதிநவீன மருத்துவ தொழில்நுட்ப கருவிகள், தரமான உட்கட்டமைப்புடன் செயலாற்றி வருவதால் மிக சவாலான தரு ணங்களிலும் தரமான மருத்துவ சிகிச்சையை வழங்க முடிகிறது என் றார்.

படிக்க வேண்டும்

spot_img