தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்டுத்துவோர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட பேரவை கூட்டம், சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் அன்பு தலைமையில் நடைபெற்றது.
மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் மல்லையன்,,மாவட்டச் செயலாளர் அர்ச்சுனன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், தமிழகத்தில் கோயில், மடம், வக்ஃப் போர்டு, தேவாலயங்கள் உள்ள இடங்களில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர்.
கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் பயிர் சாகுபடியும் செய்து வருகின்றனர். சில ஆண்டுகளாக குத்தகை வாடகையும் ஏற்றியுள்ளனர்.
அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பி அனைத்திற்கும் சீல் வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டும் வருகின்றனர்.
எனவே இது போன்ற செயல்களை அறநிலையத்துறை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.



