fbpx
Homeபிற செய்திகள்அதானி மாலை நேர கல்வி மையம் ஆரம்பம்

அதானி மாலை நேர கல்வி மையம் ஆரம்பம்

அதானி ஃபவுண்டேஷன், காட்டுப்பள்ளியில் ‘அதானி மாலை நேர கல்வி மையம்’ (AEEC) தொடங்கி இருக்கிறது.

6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை இலக்காகக் கொண்டிருக்கும் ஏஇஇசி செயல்திட்டம், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களை கற்பிப்பது மீது சிறப்பு கவனம் செலுத்தும். அத்துடன் பிற பாடங்களிலும் அவர்களை பயிற்றுவிக்க இது உதவும். ஒரு வாரத்தில் 6 நாட்களுக்கு மாலை 5 மணியிலிருந்து 7 மணி வரை தினசரி இந்த மாலை நேர வகுப்புகள் நடத்தப்படும். இவ்வகுப்புகளை நடத்துவதற்கான அமைவிட வசதி, பஞ்சாயத்து வழங்கி இருக்கிறது.

ஏஇஇசி செயல்திட்டம் என்பது அதானி ஃபவுண்டேஷனின் கார்ப்பரேட் சமூக பொறுப்புறுதி செயல்திட்டத்தின் (சிஷிஸி) ஒரு பகுதியாகும். 11 பஞ்சாயத்துகளைச் சேர்ந்த 71 கிராமங்களில் சமூக முன்னேற்ற நடவடிக்கை மீது இச்செயல்திட்டம் சிறப்பு கவனம் செலுத்துகிறது. ஏஇஇசி காட்டுப்பள்ளி பழவேற்காடு, கோட்டைக்குப்பம், லைட் ஹவுஸ் குப்பம் ஆகிய பஞ்சாயத்துகளைச் சேர்ந்த ஐந்து கிராமங்களில் மாலைநேர கல்வி வகுப்புகளை நடத்தும்.

காட்டுப்பள்ளி கிராம பஞ்சாயத்தின் தலைவர் சேது ராமன், துவக்கி வைத்து பேசியதாவது:
2022 ஜனவரி 31-ம் தேதி வரை அரசின் ஆணைகளின் படி பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் 6 முதல் 10 -ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அதானி குழுமத்தின் இந்த செயல்திட்டம் உதவி வருகிறது. இதற்கும் அதிகமான பிற பாடங்களையும் கற்றுக் கொள்வதற்கான தங்களது விருப்பங்களை வெளிப்படுத்தவும் மற்றும் ஆர்வத்தோடு இதில் பங்கேற்க முன்வரவும் வேண்டுமென்று விரும்புகிறேன் என்றார்.

பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட படிப்பை முடித்து, சமூகத்திற்கு சேவையாற்றுவதில் ஆர்வம் கொண்டிருக்கிற உள்ளூர் சமூக உறுப்பினர்களிலிருந்து, இந்த கல்விப்பணியில் ஈடுபடுவதற்கான ஆசிரியர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். 5 கிராமங்களில் இந்த முனைப்புத்திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img