இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத் தின் சென்னை மண்டல நாட்டு நலப்பணித்திட்ட இயக்குநரகம், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து, கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல் லூரியில் நடத்திய, ‘நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கான 7 நாள் தேசிய ஒருமைப்பாட்டு முகாம்’ இன்றுடன் (டிச.20) நிறைவு பெற்றது.
12 மாநிலங்களைச் சேர்ந்த 26 பல்கலைக் கழகங்கள், 72 கல்லூ ரிகளில் படிக்கும் 200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிறைவு விழாவிற்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி தலைமை வகித்தார். ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் கோவை மாநகரக் காவல் ஆணையர் பிரதீப்குமார் பேசியதாவது: நாம் ஒவ்வொருவருக்கும் மற்றவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள ஏதாவது இருக்கும். அந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட இம்முகாமில் 12 மாநிலங்களைச் சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்றது பாராட்டத்தக்கதொரு நிகழ்வாகும்.
சுவாமி விவேகானந்தரின் சேவா என்ற ஒரு சொல் மந்திரம், தன்னலமற்ற சேவையைக் குறிக்கிறது. இச்சொல் நாட்டு நலப்பணித் திட்டத்திற்கு மிகவும் பொருந்தும்.
நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பானது பல்வேறு சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலும், சாலை பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு காவல் ஆணையர் பிரதீப்குமார் பேசினார்.
சென்னை நாட்டு நலப்பணித்திட்ட இயக்குநரக மண்டல இயக்குநர் முனைவர் சி.சாமுவேல் செல்லையா, பேசும்போது, ‘நாட்டு நலப்பணித்திட்டத்தின் இலக்கே சமுதாயப் பொறுப்பை அடிப்படையாகக் கொண்டதுதான்.
நாட்டு நலப்பணித்திட்ட தேசிய ஒருமைப்பாட்டு முகாம் முதன் முதலாக கோவையில் நடைபெறுகிறது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாண வர்கள் பங்கேற்று இருப்பது, குட்டி இந்தியாவாக இந்த முகாம் காணப்படுகிறது.
இம்முகாம் இளம் மனதில் தன்னார்வச் சேவை யை இளம் மனதில் விதைத் துள்ளது’ என்றார். முகாமைச் சிறப்பாக நடத்தியதற்காக எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமிக்கு, சென்னை நாட்டு நலப்பணித்திட்ட இயக்குநரக மண்டல இயக்குநர் முனைவர் சி.சாமுவேல் செல்லையா பாராட்டுச் சான்று வழங்கினார்.
பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ) முனைவர் ஆர்.அண்ணாதுரை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் எஸ்.பிரகதீஸ்வ ரன், ஆர்.நாகராஜன், ஏ.சுபாஷினி, ஜெ.தீபக் குமார், பி.கீர்த்திவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



