கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி சார்பில் 135-வது தொ டர் ஓட்டம் நடந்தது. ஸ்டேன்ஸ் சகோ தரப் பள்ளிகளும் இத் தொடர் ஓட்டத்தில் பங்கேற்றன.
சி2 காவல் நிலையத் தில் இருந்து துவங்கிய இத் தொடர் ஓட்டம் பள்ளி மைதானத்தில் நிறைவடைந்தது. கோவை மாநகரக் காவல் ஆணையர் தொடர் ஓட்டத்தை கெ £டியசைத்து துவக்கி வைத்தார்.
பள்ளி தாளாளர் பிலிப் ஆர்.ஜே.பவுலர், பள்ளித் தலைவர் மெர்சி ஓமன், முதல்வர் செலின் வினோதினி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு வழிகாட்டிட நியமிக்கப் பட்ட ஆசிரியர்கள், வழி நடத்தினர்.
போக்குவரத்து காவல் துறையினர், போக்குவரத்தை சீர் செய்து மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கினர். மாணவர்கள் ஆதித்யா, ஆலன் ஸ்டீவ், சஞ்சை ஆகி யோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். அவர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



