நுண்ணுயிர் உரதரக் கட்டுப்பாடு – சமீ பத்திய முன்னேற்றங்கள் என்ற தலைப் பில், தமிழ்நாடு வேளாண் துறை சார்ந்த, உயிர் உர உற்பத்தியில் ஈடுபடும் 28 விவசாய அலுவலர்களுக்கு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் இரண்டு நாள் பயிற்சி நடந்தது.
பயிற்சி முகாமை பல்கலை. துணை வேந்தர் முனைவர் நீ.குமார் துவக்கி வைத்து பேசினார். அப்போது, உயிர் உரங்களின் முக்கியத்துவம், நுண்ணுயிர் உரங்களை பயன்படுத்துவதால் 6 சதவீதம் செயற்கை உரங்கள் பயன்பாடு குறைவது பற்றி சுட்டிக் காட்டினார்.
புதிய வகை நுண்ணுயிர் உரங்களான, வறட்சியைத் தாங்கும் தன்மையை ஊக்குவிக்கும் பி.பி.எப்.எம். (மிதைலோ பாக்டீரியம்), நெற்பயிர் வளர்ச்சி நிலைக்கு உகந்த நுண்ணுயிர் உரங்கள் மற்றும் துத்த நாக சத்தை கரைக்க வல்ல உயர் உரம், தளைச் சத்து, மணி சத்து, சாம்பல் சத்து மற்றும் துத்தநாக சத்தை வழங்கக் கூடிய நுண்ணுயிர் உரக் கலவைப் பற்றியும் கூறினார்.
மண் மற்றும் ஆரோக்கியத்தில் நுண்ணுயிர்களின் பங்கு பற்றி வேளாண்மைப் பல்கலைக் கழக இயற்கை வளமே லாண்மை இயக்குநர் முனைவர் அர.சாந்தி பேசினார்.
தமிழகத்தின் அங்கக வேளாண் உத்திக்கு தரமான நுண்ணுயிர் உரத்தின் பங்கு பற்றி, கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஆர்.சித்ரா தேவி பேசினார்.
தேசிய மற்றும் சர்வதேச அளவில் நுண்ணுயிர் உர உற்பத்தி மற்றும் தரக் கட்டுப்பாடு பற்றிய சமீபத்திய சூழ்நிலைகளை எடுத்துக் கூறினார் டீஸ் டேன்ஸ் நிறுவன இணை துணைத் தலைவர் முனைவர் எஸ்.மாரிமுத்து.
புதிய நுண்ணுயிர் உரத் தயாரிப்பு (மைக் கோரைசா, நுண்ணுயிர் கலவை) பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
வேளாண் நுண்ணுயிரியல் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் வே.கோமதி வரவேற்றார். நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் முனைவர் என்.ஓ.கோ பால் நன்றி கூறினார்.



