fbpx
Homeபிற செய்திகள்ஈரோட்டில் 25 ஏக்கரில் நவீன பேருந்து நிலையம் மாவட்டத்தில் 85 திட்டங்கள் செயல்படுத்த ஆய்வு-அமைச்சர் சு.முத்துசாமி...

ஈரோட்டில் 25 ஏக்கரில் நவீன பேருந்து நிலையம் மாவட்டத்தில் 85 திட்டங்கள் செயல்படுத்த ஆய்வு-அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

ஈரோடு மாநகர் சோலாரில் சுமார் 20-25 ஏக்கர் அளவில் நவீன பேருந்து நிலையம் அமைப்பதற்கு திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஒரு முன் மாதிரியான பேருந்து நிலையமாக இருக்கும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.

இத்திட்டம் முடிவடைய சுமார் 2 ஆண்டுகள் ஆகும். சுமார் 85 திட்டங்கள் மாவட்டம் முழுவதும் செயல்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்து சாமி தெரிவித்தார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நேற்று (செப்.23), சமூக பாதுகாப்புத் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு, முதலமைச் சரின் கொரோனா நிவாரண நிதி மற்றும் வருவாய்த் துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்து சாமி வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார்.
ஈரோடு நாடாளுமன்ற உறுப் பினர் அ.கணேசமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் இ.திருமகன் ஈவெரா (ஈரோடு கிழக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோரை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா ரூ.5 இலட்சம் வைப்பீடு செய்யவும், அந்தக் குழந் தை 18 வயது நிறைவடையும் போது, அந்தத் தொகை அந்தக் குழந்தைக்கு வட்டியோடு வழங்கிடவும், பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

இக்குழந்தைகளுக்குப் பட்டப் படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவி னங்களையும் அரசே ஏற்கவும் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கெனவே தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது கொ ரோனா நோய்த் தொற்றினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் ரூ.5 இலட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு செய்யப்படும் என்று முதல்வர் அறி வித்தார்.

14 குழந்தைகளுக்கு
ரூ.42 இலட்சம் வழங்கல்
ஈரோடு மாவட்டத்தில் கொ ரோனா பெருந்தொற்று காரணமாக தாய் அல்லது தந்தையை இழந்த 14 குழந்தைகளுக்கு, முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதியாக தலா ரூ.3 இலட்சம் என ரூ.42 இலட்சம் வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் கொரோனா பெருந் தொற்று காரணமாக தாய்-தந்தை மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த 304 குடும்பங்களுக்கு, முதல்வரின் நுகர்வோர் வாணிபக் கழகத்தின் மூலம் வழங்கப்படும் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய, கொரோனா சிறப்பு நிவாரண பொருட்கள் மற்றும் நன்செய் தொண்டு நிறுவனம் சார் பாக 40 பள்ளி குழந்தைகளுக்கு பள்ளி சீருடை, பாட நோட்டுகள், நோட்ஸ்கள் மற்றும் புத்தக பைகளை அமைச்சர் வழங்கினார்.

வருவாய்த் துறையின் சார்பில், கோபி செட்டிபாளையம், வட்டத்தைச் சேர்ந்த 25 பேருக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்பக் கொடை நிதி யில் இருந்து தலா ரூ.4,777- வீதம் ரூ.1,19,425 மதிப்பீட்டில் விலையில்லா சலவைப் பெட்டிகளையும், முதல மைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ், மின்சாரம் தாக்கி மற்றும் சாலை விபத்தில் இறந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 இலட்சமும் மற்றும் 3 பேரின் குடும் பத்தினருக்கு தலா ரூ.1 இலட்சம் என 7 குடும்பத்தினருக்கு ரூ.15 இலட்சத்திற்கான காசோலைகளை அமைச்சர் வழங்கினார்.

ரூ.58,19,425 மதிப்பில்
71 பேருக்கு நலத் திட்ட உதவி
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் பாரதப் பிரதமரின் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீட்டு திட்டம் மற் றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ், மருத்துவ சிகிச்சை பெற்ற 5 பேருக்கு பரிசுப் பொருட்களையும், புதிதாக பதிவு செய்யப்பட்ட 16 பேருக்கு காப்பீடு அட்டைகளையும், சிறப்பாக பணியாற்றிய மருத்துவக் காப்பீடு பணியாளர்கள் 3 பேருக்கு ஊக்கத் தொகை என மொத்தம் 71 பயனாளிகளுக்கு ரூ.58,19,425 மதிப் பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் சு.முத்து சாமி செய்தியாளர்களிடம் தெரிவித் ததாவது:
ஈரோடு மாவட்டத்திற்கு பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்த முதல்வர் அனுமதி அளித்துள்ளார். புதிதாக என்ன திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் சுமார் 85 திட்டங்கள் மாவட்டம் முழுவதும் செயல்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சோலாரில் சுமார் 2025 ஏக்கர் அளவில் நவீன பேருந்து நிலையம் அமைப்பதற்கு திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது ஒருமுன் மாதிரியான பேருந்து நிலையமாக இருக்க வேண்டும் என்ற முனைப்போடு அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.

இத்திட்டம் முடிவடைய சுமார் 2 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதே இடத்தில் தற்போது தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

அரச்சலூரில் 4-5 ஏக்கர் அளவில் பேருந்து நிலையம் மற்றும் கனிராவுத்தர் குளத்தில் ஒரு பேருந்து நிலையமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சி.என்.சி. கல்லூரி அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் பெரிய அளவில் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மிகப் பெரிய நூலகம் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.

இந்த நூலகம் அனைத்து வகையான மாணவ, மாணவியர் பயனடையும் வகையிலும் குறிப்பாக போட்டித் தேர்வுகள் எழுதும் மாணவர்கள் பெரிதும் பயன டையும் வகையில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

1200 படுக்கைகளாக
உயர்த்த திட்டம்
ஜ.ஆர்.டிமருத்துவக் கல்லூரி மருத்துவனையில் 550 படுக்கைகள் இருந்ததை, 1200 படுக்கைகளாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன.

இதில் பல கட்டிடங்கள் முடிக்கப்பட்டுள்ளன. சில கட்டிட வேலை விரைவாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

இக்கல்லூரியில், இந்த கல்வி ஆண் டிற்கு 100 மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்காக சேர்க்கப்பட உள்ளனர். முதுகலை பாடப் பிரிவுகள் தொடங் கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

வளர்ச்சியை நோக்கி
ஈரோடு மாவட்டம்
இதுபோன்ற எண்ணற்ற திட் டங்கள், இந்த ஆண்டிற்குள்ளும் வருகிற அடுத்தடுத்த ஆண்டுகளிலும் விரைவாக செயல்படுத்தப்படும்.

இத்திட்டங்கள் அனைத்தும் நிறை வடையும் போது, ஈரோடு மாவட்டம் பன்மடங்கு வளர்ச்சியை நோக்கி செல்லும்.

இத்தகைய வளர்ச்சித்திட்டங்களில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கையையும் ஊக்கத்தையும் முதல்வர் வழங்கியுள்ளார். எனவே அனைத்து வளர்ச்சி திட்டங்களும் சிறந்த முறையில் நிறை வேற்றப்படும்.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

கட்டிடப் பணிகள் பார்வை
அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.41 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடத்தின் பணிகளை பார்வையிட்டார்.

கனிராவுத்தர் குளம், சோலார் பகுதிகளில் தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டார்.

நகர ஊரமைப்பு இயக்குநர் சரவணவேல் ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் ப.முருகேசன், இணை இயக்குநர் (பொது சுகா தாரம்) மரு.கோமதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ப.பிரியாதேவி, மாவட்ட திட்ட அலுவலர் (காப்பீடு) சசிகுமார், தொண்டு நிர்வாகி தர்மராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img