மருந்து கலந்த மேற்பூச்சு கிருமி நாசினி பிராண் டுகளில் (மெடிக்கேட்டட் ஆண்டிசெப்டிக் டாப்பிக்கல் பிராண்டு) இந்தியாவில் முதலாவது இடத்தில் இருக்கும் சிப்லா ஹெல்த் தயாரிப்பான, சிப்லாடைன் உலக முதலுதவி தினத்தைத் தொடர்ந்து,“லைஃப்கா ஃபர்ஸ்ட் எய்ட்” (வாழ்க் கைக்கான முதலுதவி) என்ற துடிப்பான பல்வகை பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது.
முதலுதவியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மேலோங்கச் செய்ய பல்முனை யுக்திகளை இந்தப் பிரச்சாரம் பயன்படுத்துகிறது.
சிப்லாடைன் பிராண் டின் அடையாளக் குறியீட்டு வரிகளில் ஒன்றான “ஸ்கின்கா ஃபர்ஸ்ட் எய்ட்” (சருமத்திற்கான முதலுதவி) என்பதை “லைஃப்கா ஃபர்ஸ்ட்எய்ட்” (வாழ்க்கைக்கான முதலுதவி) என்று தனது பிரச்சார முழக்கமாக பயன் படுத்தியிருக்கிறது.
இந்த வெளியீட்டின் போது, சிப்லா ஹெல்த் லிட்டின் சிஇஓ ஷிவம்பூரி கூறியதாவது: ஒரு விபத்து அல்லது இடர்ப்பாடு சமயத் தில் முதலுதவி எவ்வாறு உயிர்களைக் காக்க முடியும் என்பதற்கான விழிப்புணர்வை பொதுமக்களிடையே மேம்படுத்துவதற்காக உலக முதலுதவி தினம் உருவாக்கப்பட்டது.
துரதிருஷ்டவசமாக, இந்த அதிமுக்கியமான உயிர்காக்கும் செயல்திறன் குறித்த பொதுவான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இன்னும் குறை வாகவே காணப்படுகிறது.
சுகாதாரம் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் குறித்த தகவல்களை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் உறுதிப்பாட்டிற்கு இணங்க அவசரகால சிகிச்சை யின் முக்கியமான அம்சம் குறித்த விழிப்புணர்வை “லைஃப்கா ஃபர்ஸ்ட் எய்ட்” என்ற பிரசாரத்தின் மூலமாக மேம்படுத்தும் நம்பிக்கையோடு இருக்கி றோம்.
கிருமி நாசினி -நோய்த் தொற்றுக் கொல்லி வெ ளிப் பூச்சு மருந்தாக உருவாக்கப்பட்ட சிப்லா டைன், சிறுவெட்டுக் காயங்கள், புண்கள், தீக்க £யங்கள் மற்றும் சரும நோய்த் தொற்றுக்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.
அதன் முக்கிய உட் கூறான போவிடோன் ஐயோடின் மருந்து, சரும நோய் மருந்து தயாரிப்பில் ஒரு நம்பகமான மூலப் பொருளாக அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக விளங்கி வருகிறது.
நோய் நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்தாக நோய் நுண்ணுயிர் கிருமிகள், வைரஸ்கள், பூஞ்சைகள், ஈஸ்ட்டுகள், நுண்ணுயிர் கருக்கூடுகள் (ஸ்போர்ஸ்) ஆகியவற்றை இது எதிர்த்துப் போராடுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.



