மதுரை வைகை விஸ்வகர்மா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், விராட் விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழா, வண்டியூர் குருசாமி அம்பலம் திருக்கண் மண்டபத்தில் நடந்தது.
மானேஜிங் டிரஸ்டி தாமோதரன், செயலாளர் குமரேசன், பொருளாளர் ஞானேஸ்வரன், இணைச் செயலாளர் முத்துராஜ், டிரஸ்டி முத்துராஜ் சசி ஆகியோர் தலைமை தாங்கினர்.
200 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகமும், ஒரு நபருக்கு மூன்று சக்கர மிதிவண்டி, மோட்டார் மிதிவண்டி உள்பட நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டன. அன்னதானம் வழங்கப்பட்டது.
முத்துக் குமார், ஜெயசக்தி, சர வணன், துரைப்பாண்டி, கருப்பையா (எ) பாலா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்



