fbpx
Homeபிற செய்திகள்வாணி ஒட்டு அணைத்திட்டத்தினை விரைவாக செயல்படுத்தப்பட வேண்டும் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

வாணி ஒட்டு அணைத்திட்டத்தினை விரைவாக செயல்படுத்தப்பட வேண்டும் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி அடுத்த இட்டிக்கல் அகரம் கிராமத்தில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் கிளைச்சங்க துவக்கவிழா மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அனுமந்தராசு தலைமை வகித்தார்.

கூட்டத்தில், கிளைத் தலைவர் நடராஜ், கௌரவத் தலைவர் நாகராஜ், மாவட்ட செயலாளர் ராஜா, மாநில மகளிர் அணி செயலாளர் பெருமாள், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெங் கடேசன், சங்க ஆலோசகர் நசீர் அகமத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமகவுண்டர் கலந்துக்கொண்டு, விவசாய கிளைச் சங்கத்தின் கொடியை ஏற்றிவைத்து கூட்டத்தின்போது நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

இதனைத் தொடர்ந்து நிருபர் களிடம் அவர் கூறியதாவது: மத் திய அரசு எந்த ஒரு பொருளை எடுத்தாலும் அதற்கு ஐந்து முறை ஜிஎஸ்டி வரி வசூலிப்பது என்பது கொள்ளைக் கூட்டத்திற்கு சமமாக உள்ளது.

ஐந்து முறை ஜிஎஸ்டி வரி விதிப்பதால் மத்திய நிதி அமைச்சர், ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் வரி வசூலித்து உள்ளதாக கொக்கரிக்கிறார். இது நாட்டு மக்களின் வயிற்றில் அடிப்பதற்குச் சமம்.

பெட்ரோல், டீசல் விலையில் 80 சதவீதம் வரியாக வைத்திருப்பது என்பது நாட்டு மக்களின் பாக்கெட்டை பிக்பாக்கெட் அடிப்பதற்கு சமம்.

தமிழக அரசு தேர்தல் அறிக்கை யின்படி விவசாயிகள் பயன்பெறும் வாணி ஒட்டு அணைத்திட்டத் தினை விரைவாக செயல்படுத்த வேண்டும்.

தூர்வாரப்படாமல் உள்ள ஏரிகளை தூர்வாரி, ஏரி கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வறட்சியால் காய்ந்து போன மாமரங்களுக்கு உரிய மானி யம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img