ஒப்போ என்கோஏர் 2 ப்ரோடி டபிள்யூஎஸ் இயர் பட்களுடன் அதன் எஃப் 21 ப்ரோ மற்றும் எஃப் 21 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒப்போ எஃப் 21 ப்ரோ 5ஜி மற்றும் ஒப்போ என்கோஏர் 2 ப்ரோ ஏப்ரல் 21 முதல் ஆன்லைன் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக விற்பனைக்கு வரும்.
எஃப் 21 ப்ரோ மற்றும் எஃப் 21 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் செல்ஃபி படப்பிடிப்பில் ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளது.
எஃப்21 ப்ரோவின் 32 எம்பி செல்ஃபி கேமரா- சோனியின் ஐஎம்எக்ஸ் 709 ஆர்ஜிபி டபிள்யூ (சிவப்பு, நீலம், பச்சை, வெள்ளை) செல்ஃபி சென்சாருடன் உள்ளது.
ஒப்போ, 15ஒஃ30ஒ உருப்பெருக்கத்திற்கான முறையுடன் ஒப்போ எஃப்21 ப்ரோ-வில் இந்த பிரிவிலேயே முதல் முறையாக 2 எம்பி மைக்ரோ லென்ஸ்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
எஃப்21 ப்ரோ 5ஜி, மறுபுறம், 16 எம்பிமுன்பக்ககேமரா, 64எம்பிபிரதானகேமரா, 2 எம்பிடெப்த் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ டிரிபிள் கேமரா யூனிட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
எஃப் 21 சீரிஸ் பற்றி ஒப்போ இந்தியா நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி தமியாந்த் சிங்கானோ ரியா கூறியதாவது:
புதிய எஃப் 21 சீரிஸ் மூலம், எஃப் சீரிஸ் வழங்கும் உயர் மதிப்புகளைத் தக்க வைத்துக்கொண்டு, தொழில்முறை போர்ட் ரெய்ட் புகைப்படம் எடுப்பதில் புதிய அளவுகோலை அமைத்துள்ளோம். மிகவும் மெலிதான, கண்ணைக்கவரும் ஸ்மார்ட்ஃபோனை வாங்கி, உங்களுக்குப் பிடித்த நினைவுகளை உருவப்படங்களைத் தெளிவாகப் படம் பிடிக்கலாம் என்றார்.
எஃப் 21 ப்ரோ இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது. சன்செட் ஆரஞ்சு, காஸ்மிக்பிளாக் ஆகியவை அவை.
எஃப்21 ப்ரோ 5ஜி, இரண்டு வண்ணங்களில் வருகிறது.ரெயின்போ ஸ்பெக்ட்ரம், காஸ்மிக் பிளாக் ஆகியவை அவை.



