fbpx
Homeபிற செய்திகள்மின் இணைப்பு பெற்ற ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்

மின் இணைப்பு பெற்ற ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்

எரிசக்தி துறையின் 2021-&2022 ம் ஆண்டு மானியக் கோரிக்கையில் மாநிலத்தின் விவசாய உற்பத்தியினை பெருக்கி, விவசாயிகளின் நலனை மேம் படுத்தும் நோக்கத்துடன் ஒரு லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக இதுவரையிலும் இல்லாத அதிகபட்ச அளவாக இந்த ஆண்டு ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்க முடிவெடுக்கப்பட்டு, முதலமைச்சரால் 23.09.2021 அன்று இத்திட்டம் துவக்கி வைக் கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையிலுள்ள தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், ஓராண்டில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் பெற்று பயனடைந்த விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

இதையொட்டி காணொலி காட்சி வாயிலாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத், ராமநா தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, ராமநாதபுரம் சட் டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா, முத்துராமலிங்கம் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,00,000 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங் கும் திட்டத்தின் சார்பில் ராமநாதபுரம் கோட்டத்தில் சாதாரண வரிசைத் திட்டத்தின் கீழ் 143 இணைப்புகளும், ரூ.10,000 சுயநிதி திட்டத்தின் கீழ் 3 இணைப்புகளும், ரூ.25,000 சுயநிதி திட்டத்தின் கீழ் 5 இணைப்புகளும்,ரூ.50,000 சுயநிதி திட்டத்தின் கீழ் 2 இணைப்புகளும், தத்கல் திட்டத்தின் கீழ் 18 இணைப்புகளும், அரசு சிறப்பு திட்டத்தின் கீழ் 2 இணைப்புகளும், பரமக்குடி கோட்டத்தில் சாதாரண வரிசைத் திட்டத்தின் கீழ் 103 இணைப்புகளும், ரூ.10,000 சுயநிதி திட்டத்தின் கீழ் 18 இணைப்புகளும், ரூ.50,000 சுயநிதி திட்டத்தின் கீழ் 5 இணைப்புகளும், தத்கல் திட்டத்தின் கீழ் 61 இணைப்புக்களும்,அரசு சிறப்பு திட்டத்தின் கீழ் 6 இணைப்புகளும் என மொத்தம் 366 இணைப்புகள் இது நாள் வரை வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுமார் 718.12 ஏக்கர் பாசன பரப்ப ளவில் பயிர் செய்துள்ள விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமைந் துள்ளது. 1,00,000 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் சார்பில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் 137 மின் இணைப்புகள் ரூ.114.52 லட்சம் மதிப்பீட்டிலும், திருவாடானை சட்டமன்ற தொகுதியில் 25 மின் இணைப்புகள் ரூ.14.481 லட்சம் மதிப்பிலும்,பரமக்குடி சட்ட மன்ற தொகுதியில் 80 மின் இணைப்புகள் ரூ.133.731 லட்சம் மதிப்பிலும், முதுகுளத்தூர் சட்ட மன்ற தொகுதியில் 124 மின் இணைப்புகள் ரூ.249.580 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 366 மின் இணைப்புகள் ரூ.512.316 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப் பட்டுள்ளன.

முன்னதாக மின் விபத்தினால் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.5,00,000 இலட்சத்திற்கான நிவாரண தொகையினை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், ராமநாதபுரம் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மேற்பார்வை பொறியாளர் பிரிடா பத்மினி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் வேலுச்சாமி, மண்டபம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுப்புலெட்சுமி, ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், ராமநாதபுரம் நகர்மன்ற துணைத் தலைவர் பிரவீன் தங்கம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கவிதா கதிரேசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் மற் றும் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img