fbpx
Homeபிற செய்திகள்தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சேலம் மாவட்டம் ஏற்காட்டில், தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

மேலும் சுற்றுலா பயணிகள் படகு இல்லம்,ரோஜா தோட்டம், அண்ணா பூங்கா போன்ற இடங்களில் அதிக அளவில் காணப்பட்டனர்.

பொதுவாக மூன்று மாநிலங்களில் இருந் தும் சுற்றுலா பய ணிகள் ஏற்காட்டிற்கு வருவது வழக்கம். அதாவது கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து ஏற்காட்டை சுற்றிப்பார்க்க ஆவலோடு வருகின்றனர்.

அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஆங்காங்கே வாகன நெரிசலும் உள்ளவாறே காணப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகள் அண்ணா பூங்கா, ஏரிப்பூங்கா, ரோஜா தோட்டம் போன்ற இடங்களில் குடும்பமாக பொழுதை போக்கி மகிழ்ந்தனர்

படிக்க வேண்டும்

spot_img