கொச்சி இன்போபார் க்கைத் தலைமையிடம £கக் கொண்ட வளர்ந்து வரும் கல்வி நிறுவனமான அவோதா, இளைஞர் களின் திறமையை மேம்படுத்த மாநில அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக அவோதா, தற்போது தெலுங்கானா அரசு நிறுவ னமான செட்வினுடன் இது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அவோதா தலைமை நிர்வாக அதிகாரி ஜோசப் இ ஜார்ஜ், செட்வின் நிர்வாக இயக்குனர் வேணு கோபால ராவ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
செட்வின், 1978-ம் ஆண்டு தெலுங்கானா மாநில அரசால் இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்காக உருவாக்கபட்டது. புதிதாகத் தொடங்கப்பட்ட இந்த செட்வின் இணைய தளம் (https://www.setwin.online/) மூலமாக அவோதா அம்மாநில இளை ஞர்களுக்கு அதன் பாடத்திட்டங்களை வழங்கவுள்ளது.
டிஜிட்டல் மார்க்கெட் டிங், எத்திக்கல் ஹேக்கிங், மெடிக்கல் கோடிங், கேம் டெவலப்மெண்ட், ரிலேஷன்ஷிப் மேனேஜ் மென்ட், கார்ப்பரேட் ஆபீஸ் அசிஸ் டென்ட், ஸ்டோர் மேனேஜ்மென்ட் மற்றும் ஹாஸ்பிடல் மே« னஜ்மென்ட் போன்ற 8 படிப்புகளை வழங்க செட் வின், அவோதாவுடன் கைகோர்த்து வருகிறது.
அவோதா படிப்புகளின் உயர்ந்த தரம், ஒப்பீட்டளவில் குறைந்த கட்டணங்கள் மற்றும் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு வசதிகள் ஆகியவை தெலுங்கானா அரசாங்கத்தை அவோதாவுடன் இணைக்க கொண்டு வந்ததாக ஜோசப் இ ஜார்ஜ் கூறினார்.
அவோதாவின் பாடத்திட்டங்களின் எளிமை தெலுங்கானா அர சாங்கத்தின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. ஆங் கிலத்தில் மட்டுமே கற்க கூடிய சில பாடத்திட் டங்களை அவோதா அவர் களின் பிராந்திய மொழியில் வழங்குகிறது என்று அஸ்வின் கே சேகர், தலைவர் (விற்பனை) கூறினார்.
அவோதா தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 23-க்கும் அதிகமான பாடத் திட்டங்களை வழங்குகிறது.
செட்வின் ஆன்லைனில் ரூ.2,800 கட்டணத்தில் பாடத்திட்டங்களை வழங்குகிறது.
வகுப்புகளின் கா லம் மூன்று மாதங்கள் (60-75 மணி நேரம்). மூன்று மாத இன்டர்ன்ஷிப்பும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. பாடத்திட்டங்களை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் அவோதா வழங்குகிறது.



