கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க 6-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
இதையொட்டி 73-வது வார்டில் வெற்றி பெற்று, கோவை மாநகராட்சியின் நகரமைப்பு மற்றும் மேம்பாட்டுக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, முன்னாள் மாணவர் டி.சந்தோஷுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்து பேசினார். முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் முனைவர் ஆர்.பிரபு வரவேற்றார்.
டி. சந்தோஷ் சிறப்புரை ஆற்றினார். அவருக்கு முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
முன்னாள் மாணவர் ரஜினிகாந்த் ரூ.1 லட்சம் நன்கொடைவழங்கினார்.
அதைத்தொடர்ந்து பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் மாணவர் சங்கச் செயலர் முனைவர் ஜி.செந்தில் குமார் நன்றி கூறினார்.



