பெய்யும் மழைத் தண்ணீரை சேமித்து, பாதுகாப்பாக பத்திரப்படுத்தி நமக்குத் தேவையான போது பயன்படுத்திக் கொள்வதே, மழைநீர் அறுவடையாகும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கோவை புலியகுளம் புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி யில் நீர் மேலாண்மை குறித்த பயிற்சி நடந்தது. பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மற்றும் தேசிய மாணவர் படை அலுவலர் ஆல்பர்ட் அலெக்ஸ்சாண் டர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
விண்ணில் இருந்து மண்ணில் விழும் ஒவ்வொரு நீர்த்துளியும் அவ்விடத்திலே சேமிக்கப்பட வேண் டும். நீரின்றி அமையாது உலகு என்கிற வள்ளுவன் வாக்கிற்கிணங்க, இப்பூமியில் அத்தனை ஜீவராசிக ளும் பிழைத்திருக்க நீரானது அவசிய மானதாகும்.
நீரானது பூமிக்கு இயற்கையின் கொடையால் கிடைக்கிறது. இந்நீரைபாதுகாத்து மக்கள்தம் தேவைக்கு பயன்படுத்திக் கொள்வதும்,சேர்த்து வைக்கும் முறைகளையே, நீர் மேலாண்மை என்று கூறுகிறார்கள்.
வரப்புயர நீருயரும், நீர் உயர்ந்தால் நெல் உயரும், நெல் உயர்ந்தால் குடி உயரும் குடி உயர்ந்தால் கோன் உயர்வான் என்று ஔவையார் கூறியுள்ளார்.
எனவே நீர் மேலாண்மையை நாம் சரியாக பேணுகின்ற போதுதான், நமது வாழ்வும் விவசாயமும் சிறப்பாக அமையும்.இல்லா விட்டால் வறட்சியால் விவசாயம், மனிதவாழ்க்கை என்பன கேள்விக் குறியாகி விடும்.
இனி ஓர்உலகப்போர் உருவாகுமா னால், அது நீருக்கானதாக தான் இருக்கும் என சூழல்ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். பெய்யும் மழைத் தண்ணீரை சேமித்து, பாதுகாப்பாக பத்திரப் படுத்தி நமக்குத் தேவையான போது பயன்படுத்திக் கொள்வதே மழைநீர் அறுவடையாகும்.
நமது வீட்டிற்கு மேல் பெய்யும் மழையை, அதாவது வீணாகும் மழைநீரை சேமித்தல், பாதுகாத்தல், சுத்தம் செய்து பயன் படுத்துவதே மழைநீர் சேகரிப்பு ஆகும்.
இன்று தரமான, சுத்தமான தண்ணீர் நமது அன்றாட பயன்பாட்டிற்கு கிடைப்பது மிகப்பெரிய பிரச்சினையாக இருப்ப தால், மழைநீரை அறுவடை செய்யவேண்டும். நம்மிடமுள்ள தண் ணீரிலேயே மழைநீர் தான் மிகவும் சுத்தமானது.
தரமானதும் கூட. எனவே இப்படியொரு தரமான நீரை வீணாக்காமல் சேமிப்பதால் நிலத்தடியிலிருந்து கிடைக்கும் நீருற்று அதிகரிக்கிறது. கிடைக்கும் மழைநீரை பயன்படுத்தி கட்டிடம் கட்டலாம், விவசாயமும் செய்யலாம்.
அதிக தரமான நீர். எவ் வித நச்சுக்களோ, ரசாயனப் பொருட் களோ கலக்காத சுத்தமான நீர் இந்த மழைநீர். மழைநீர் சேமிப்பால் வெள்ளச் சேதம் குறையும், மேல்மண் அடித்து செல்வதும் தடுக்கப்படுகிறது.
இதுபோன்ற கருத்துக்கள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.
மாணவர்களிடம் விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வாழைமரக் கன்றுகளை எப்படி வளர்ப்பது என்று பயிற்சி கொடுக்கப்பட்டு, வாழை மரக்கன்றுகளும் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலை மையாசிரியை அமலோற்பவ மேரி கலந்து கொண்டார்.



