fbpx
Homeபிற செய்திகள்துபாய் உலகக் கண்காட்சியில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் காட்சிக் கூடம் மத்திய அமைச்சர் பியூஷ்கோயல்...

துபாய் உலகக் கண்காட்சியில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் காட்சிக் கூடம் மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் திறந்து வைத்தார்

துபாயில் நடைபெற்ற உலகக் கண்காட்சி 2020-ல், இந்திய நகைகளின் ஆத்மார்த்தமான கைவினைத் திறன் மற்றும் திறமையான கலைத் திறன், கலாச்சார பாரம்பரியத்துடனான மலபார் கோல்ட் அன்ட் டைமண்ட்ஸ் காட்சிக் கூடத்தை, இந்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ்கோயல் திறந்து வைத்து பார்வையிட்டார்.

அப்போது, உலகெங்கிலும் பிராண்டின் மீதுள்ள நம்பிக்கையையும், பாரம்பரிய கலைத்திறன், இந்திய கைவினை நகைகளை சர்வதேச அளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் அதன் திறமையையும் அமைச்சர் பாராட்டினார்.

மத்திய அமைச்சருடனான கலந்தாய்வில், மலபார் கோல்ட் அன்ட் டைமண்ட்சின் தலைவர் எம்.பி.அகமது, மேக் இன் இந்தியா, மார்க்கெட் டூ த வேர்ல்ட் முயற்சியின் மீது நிறுவனத்தின் கவனத்தை வலியுறுத்தினார்.

உலகளாவிய தளத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நகைகளை பிரபலப் படுத்துவதன் மூலம், நகை உற்பத்தி, விற்பனை, சப்ளை செயின் மற்றும் ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில், வேலைவாய்ப்பை உருவாக்குவதையும், ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்வதையும் மலபார் கோல்ட் அன்ட் டைமண்ட்ஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது.

துபாய் கண்காட்சி 2020 கலாச்சாரம், திறமை, படைப்பாற்றலுக்கான உலகின் ஈர்ப்பு மையமாக மாறியுள்ளது. உலகின் சிறந்த கலை, கலாச்சாரம், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியில் நாங்கள் இந்தியாவை பிரதிநிதித்துப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்.

நாட்டின் கலாச்சார பன்முகத்தன் மையால் ஈர்க்கப்பட்ட மலபார் கோல்ட் அன்ட் டைமண்ட்ஸ், உலகெங்கிலும் பிராந்திய- தேவைக் கேற்ற நகைகளை அளிப்பதில் பன்முகத் தன்மையை வழங்குவதன் மூலம் அதன் அடையாளத்தை உருவாக்குகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கக் கைவி னைப் பொருட்களுக்கான கட்டாய ஹால்மார்க்கிங்கை அமல்படுத்தும் இந்திய அரசின் முடிவை வரவேற்கிறோம்.

கடந்த 20 ஆண்டுகளாக பிஐஎஸ் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கத்தை மட்டுமே விற்பனை செய்வதன் மூலம் மலபார் கோல்ட் அன்ட் டைமண்ட்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படைத் தன்மையையும், தரத்தையும் வழங்கி உள்ளது.

கடந்த 28 ஆண்டுகளில் மலபார் கோல்ட் அன்ட் டைமண்ட்ஸ் தங்கம் மற்றும் வைர நகை சில்லறை விற்பனை, உற்பத்தி மற்றும் பல -சில்லறை வணிகம் ஆகியவற்றால் உலகாளவிய போட்டி நிறு வனமாக மாறி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img