fbpx
Homeபிற செய்திகள்மரங்களை நட்டு தொடர்ந்து பராமரிப்பு: கோவை காந்திபுரத்தை பசுமையாக்கும் தொழிலாளர்கள்

மரங்களை நட்டு தொடர்ந்து பராமரிப்பு: கோவை காந்திபுரத்தை பசுமையாக்கும் தொழிலாளர்கள்

கோவை காந்திபுரம் பகுதியில் சாலையோ ரங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து நகரை பசுமை யாக்கும் முயற்சியில் இறங் கியுள்ளனர் கோவையை சேர்ந்த தன்னார்வர்லர்கள்.

கோவை காந்திபுரம் பகுதி எப்போதுமே பரபரப்பான பகுதியாக உள்ளது. இங்கிருந்து வெளிமாவட்டங்களும், மாநில ங்களும், கோவை யின் பெரும்பாலான பகுதி களுக்கும் செல்வதற்கான பேருந்து வசதிகள் உள்ளன.

மேலும், சிறிய பாத்திரங்கள் தொடங்கி, வீட்டு உபயோகப்பொருட்கள், புத்தாடைகள், நகைகள் என அனைத்து விதமான பொருட்களை விற்பனை செய்யும் கடைகளும் இங்கு உள்ளன.

கோவை நகரின் இதயம் போன்ற இந்த காந்திபுரம் முழுவதும் வானோங்கிய கட்டிடங்கள் உள்ளன. இங்கு மரக்கன்றுகளை நடவு செய்யவோ, இருக்கும் மரக்கன்றுகளை பராமரிக்கவோ ஆள் இல்லாத நேரத்தில், ஆட்டோ ஓட்டுநர்கள், பாரம் தூக்கும் தொ ழிலாளிகள் ஒன்றிணைந்து காந்திபுரம் பகுதியில் பசுமையை பாதுகாக்க புறப்பட்டிருக்கின்றனர்.

காந்திபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ் மற்றும் அதே பகுதியில் பாரம் தூக்கும் வேலை பார்த்து வரும் சவுந்தர்ராஜ் ஆகிய இருவரும் இயற்கை மீது ஆர்வம் கொண்டவர்கள்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காந்திபுரம் கிராஸ்கட் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து அதனை பராமரித்து வந்துள்ளனர். எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இவர்கள் சமூகத்தின் மீது அக்கறை காரணமாக அப்பகுதியை சேர்ந்து மற்ற தொழிலாளர்களும் இவர்களுடன் சேர்ந்து மரக்கன்றுகளை நடவு செய்ய துவங்கினர்.

இவர்கள் இணைந்து பசுமை தொடர்ச்சி என்ற பெயரில் அமைப்பு ஒன்றை நிறுவி இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை நாவல், புங்கன், பாதாம், மூங்கில் உட்பட பல்வேறு விதமான மரக்கன்றுகளை காந்திபுரம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடவு செய்துள்ளனர்.

தற்போதுவரை 285 மரக்கன்றுகளை நடவு செய்துள்ள இந்த குழுவினர், வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் மரங்களுக்கு நீர்பாய்ச்சும் பணியை தொடர்கின்றனர்.

பிரகாஷ் தனது ஆட்டோவில் டிரம் ஒன்றை வைத்து அதில் தண்ணீரை நிரப்பி, வழியெங்கும் தான் நடவு செய்த மரக்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டே செல்கிறார். இவரது குழுவினர் மரங்களை தொடர்ந்து கண்காணித்து அவற்றை பராமரித்து வருகின்றனர்.

5 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் நடவு செய்த மரக்கன்றுகள் தற்போது மரமாக மாறி மக்களுக்கு நிழல் தரத்துவங்கியுள்ளன.

காந்திபுரம் வந்தால் அனைத்தும் கிடைக்கும் என்று கோவை வாசிகளுக்கு தெரியும், இப்படிப்பட்ட மண்ணுக்கு மரங்களும் தேவை என்பதை உணர்ந்த இந்த தொழிலாளிகள் கோவை மக்கள் மத்தியில் வரலாறாய் திகழ்வார்கள் என்பதில் எவ்வித சந்தே கமும் இல்லை.

படிக்க வேண்டும்

spot_img