தர்மபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட அக்கமனஅள்ளி கிராமத்தில் மக்கள் திட்டம் முகாமுக்கு வருவாய் அலுவலர் அனிதா தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, தர்மபுரி ஒன்றிய குழுத்தலைவர் நிலாபுரம் செல்வம், தர்மபுரி ஒன்றிய குழு உறுப்பினர் சரவணன், வட்டாட்சியர் ராஜராஜன், கிராம நிர்வாக அலுவலர் சசி பூஷன், தாசில்தார் (முதியோர் உதவித்தொகை) ஜெயலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் ஆறுமுகம், தோட்டக்கலை அலுவலர் வசந்தி, தோட்டக்கலை துறை அசோக், கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கர், தாமோதரன், பாலமுரளி, சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் பொதுமக்களின் அடிப்படை தேவையான இலவச வீட்டு மனை, புதிய ரேஷன் கார்டு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மாறுதல், தொகுப்பு வீடு உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் முகாமில் வழங்கினர்.
இந்த முகாமில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி 146 பேருக்கு 22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு துறைகளில் கால்நடை துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, சமூக நலத்துறை, சுகாதாரத்துறை சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கண்காட்சியை பார்வையிட்டனர். இந்த முகாமில் 272 நபர்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.



