fbpx
Homeபிற செய்திகள்பொதுமக்களுடன் நடனமாடி வாக்கு சேகரிக்கும் திமுக வேட்பாளர்

பொதுமக்களுடன் நடனமாடி வாக்கு சேகரிக்கும் திமுக வேட்பாளர்

கோவை மாநகராட்சி யின் 52 வது வார்டு திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி பொதுமக்களுடன் கும்மி அடித்தும் நடனமாடியும் வாக்கு சேகரித்தார்.

கோவை மாநகராட்சி யின் 52 வது வார்டில் திமுக வேட்பாளர் இலக் குமி இளஞ்செல்வி. முன்னாள் எம்.எல்.ஏ நா.கார்த்திக்கின் மனைவி யான இவர் அதே வார்டில் முன்னாள் கவுன் சிலராகவும் இருந்துள்ளார்.

இந்த நிலையில், தினமும் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி, கோவை பீள மேடு புதூரில் வாக்கு சேகரிப்பின்போது, பொது மக்களுடன் இணைந்து கும்மி அடித்தும், நடனம் ஆடியும் நூதன முறையில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இது அனைவரையும் கவர்ந்தது.

மேலும், தனது வார் டுக்கு உட்பட்ட பெரியார் நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் அங் குள்ள குப்பைகள் அகற்றும் தூய்மை பணி யாளர்களிடம், இந்த வார்டை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும் என்றும், அப்பகுதியில் தார் சாலை அமைத்துத் தருவேன் என்றும் உறுதி அளித்தார்.

படிக்க வேண்டும்

spot_img