டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் ஆன டாடா காபி கிராண்டின் ‘சவுண்ட்ஸ் ஆஃப் தமிழ்நாடு’ பிரசார இயக்கத்தின் வாயிலாக பொங்கலின் தனித்துவமான உணர்வைப் பிரதிபலிக்கும் பல்வேறு ஒலிகளைக் கொண்டாடும் பண்டிகைக்கால விளம்பரப் படத்தை வெளியிட்டுள்ளது.
கரும்பை முறுக்கிக் கடிக்கும் சத்தம், குழந்தைகளின் கொலுசுகளின் சத்தம், குலவையின் இசை ஒலிகள் போன்றவை விளம்பரப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
அத்துடன் ‘எந்தவொரு பண்டிகையையும் காபி இல்லாமல் எப்படி கொண்டாட முடியும்?’ என்ற கருத்துடன் இந்த விளம்பரப் படம் நிறைவடைகிறது.
டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் பேக்கேஜ் செய்யப்பட்ட பானத் தயாரிப்புகள் பிரிவின் இந்திய மற்றும் தெற்காசியப் பிரிவுத் தலைவர் புனித் தாஸ் கூறியதாவது:
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட டாடா காபி கிராண்ட் விளம்பரப் பிரசார இயக்கம், டாடா காபி கிராண்ட் காபியின் குடுவைஅல்லது பேக் செய்யப்பட்ட கவர் குலுக்கப்படும்போது கேட்கப்படும் ஒலியைக் குறிக்கும் வகையில் பிரமாதமாக அமைந்துள்ளது.
அதாவது ஷிக்-ஷிக்-ஷிக் என்ற ஒலியுடன் ‘காபி’ என்ற வார்த்தையை ஒட்டியதாக இந்த படம் அமைகிறது. இந்த ஆண்டு ஒரு படி மேலே சென்று, காபி குடிக்கும்போது ஏற்படும் உணர்ச்சிகளுடன் பண்டிகையின் உற்சாகத்தையும் படம்பிடித்துள்ளது புதிய விளம்பரப் படம்.
அதாவது, பொங்கல் பண்டிகையின் போது ஒலிக்கும் சிறப்பு ஒலிகளுடன் ‘ஷிக் ஷிக் ஷிக்’ என்ற ஒலியையும் இணைத்து இதை விரிவுபடுத்தியுள்ளோம். இந்த விழாக்கள் காட்சிகளில் மட்டும் பிரதிபலிக்கவில்லை.
அறுவடை காலம் முழுவதும் எதிரொலிக்கும் தனித்துவமான ஒலிகளையும் பிரதிபலிக்கிறது என்றார். லோவ் லிண்டாஸ் சவுத் நிறுவனத்தின் செயல் தலைவரும் கிளைத் தலைவருமான சோனாலி கன்னா, பொங்கல் என்பது தமிழ்நாட்டு மக்களின் இதயங்களுக்கு மிக நெருக்கமான பண்டிகையாகும்.
இந்தப் பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது தனித்துவமான காட்சிகள் மற்றும் ஒலிகளை பார்ப்பதும் கேட்பதும் உண்டு. இந்த விளம்பரப் படத்தில் பொங்கலின் பல உண்மையான ஒலிகள் மும்மடங்காக வெளிப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது என்றார்.



