பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையம் மற்றும் சாமி செட்டிபாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரவுண்ட் டேபிள் அமைப்புகளின் சார்பில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை கள் நடந்தன.
மத்தம்பாளையத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள் ளியில் கோவை ரவுண்ட் டேபிள்- 9 சார்பில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.
இதன் பூமி பூஜைக்கு சின்ன தடாகம் ஊராட்சி மன் றத்தின் முன்னாள் தலைவர் டி.என்.வேலுச்சாமி,பிளிச்சி ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவர் ராஜன், பள்ளி தலைமை ஆசிரியை தீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரவுண்ட் டேபிள் அமைப்பின் தலைவர் பிரேம் ஆனந்த், வட்டார தலைவர்கள் விஷ்ணு, பிரியங்கா ஆகியோர் பூமி பூஜைக்கு தலைமை வகித்து பணிகளைத் தொடங்கி வைத்தனர்.
லேடிஸ் சர்க்கிள் 9 அமைப்பின் சார்பில் பள்ளிக்கு 5 சில்வர் தண்ணீர் டிரம்களை தலைவி சரண்யா, திட்ட ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி, வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் மந்தாகினி ஆகியோர் பள்ளியின் தலைமை ஆசிரியை தீபாவிடம் வழங்கினர்.
பிளிச்சி ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலை வர் பொற்செல்வி கிரி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தண்ட பாணி, ரங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சாமி செட்டிபாளையத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கோயமுத்தூர் அக்மி ரவுண்ட் டேபிள் – 133 சார்பில் ரூ.16 லட்சம் செலவில் இரண்டு வகுப்பறைகளை கொண்ட புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையும் நடந்தது.
இதற்கு தலைமை ஆசிரியர் விக்டர், கோயமுத்தூர் அக்மி ரவுண்ட் டேபிள் அமைப்பின் வட்டார தலைவர் விஷ்ணு பிரபாகர், திட்ட ஒருங்கிணைப்பாளர் முகுந் தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரியநாயக்கன் பாளையம் வட்டார உதவி கல்வி அதிகாரி ஸ்ரீசுதா, ரவுண்ட் டேபிள் அமைப்பின் தலைவர் பிரவீன் ராஜ்,லேடிஸ் சர்க்கிள்- 85 அமைப்பின் தலைவர் பிரபா ஆகியோர் தலைமை வகித்து பணி களை தொடங்கி வைத்தனர்.
இதில் ரவுண்ட் டேபிள் அமைப்பின் செயலாளர் மோகன், லேடிஸ் சர்க்கிள்- 85 அமைப் பின் செயலாளர் கிருத்திகா ஸ்ரீ, 24.வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சாமிநாதன் உள்ளூர் பிரமுகர்கள், கல்விக்குழு உறுப்பினர்கள் கல்வி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



