பெரியநாயக்கன் பாளையம் தமிழ்ச் சங்கத்தின் டிசம்பர் மாத இலக்கிய கூட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
மகாகவி பாரதியின் 140 வது பிறந்தநாள் மற்றும் ஆலங்குடி சோமு, தீபம் நா.பார்த்தசாமி ஆகியோரின் நினைவேந்தலாக நடந்த இதற்கு முன்னாள் ஆசிரியர் பொன்.தணிகாசலம் தலைமை வகித்தார்.
சங்கத்தின் புரவலர் ஆர்.மு.ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார். ச.கமலம் தமிழ்தாய் வாழ்த்துப்பாடலைப் பாடினார். ப.கண்ணன் ஒருகுறள் விளக்கமளித்தார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஹோமியோபதி மருத்துவர் கண்ணன், மாற்றுமுறை மருத்துவம்- ஒரு அறிமுகம் என்ற தலைப்பில் பேசி, சித்தர்கள் அளித்த மருத்துவமுறைகள் குறித்து விளக்கினார்.
தொடர்ந்து நடந்த சொல்லரங்கில் ஆலங்குடி சோமு குறித்து ஆசிரியர் ரங்கநாதமூர்த்தியும்,தீபம் நா.பார்த்தசாரதி குறித்து முன்னாள் தமிழாசிரியர் வெ.ரா.கோணையனும், திராவிட வேதம் மற்றும் கிறித்துவ தமிழறிஞர்கள் தமிழு க்கு செய்த தொண்டுகள் குறித்து இரா.விஜயகுமாரும் பேசினர்.
பின்னர் பாரதி பாரதி என்ற தலைப்பில் நடந்த கவியரங்கத்திற்கு வழக்குரைஞர் இரா.சண்முகம் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் க.முனியாண்டி, ர.வீரலட்சுமி, தெய்வசிகாமணி, எல்.ஜி. பாலதண்டாயுதம், அவினாசி அரசு மேனிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை சாந்தி சொக்கலிங்கம், பெங்களூரூ சுபாஷ் சந்தர் ஆகியோர் கவிதை வாசித்தனர்.
இதனையடுத்து சங்கத்தின் செயலர் லி.கனக சுப்பிரமணியம் தலைமையில் நடந்த பாட்டரங்கத்தின் பாரதியார், கண்ணதாசன், ஆலங்குடி சோமு பாடல்களை பலர் பாடினர்.
நிகழ்ச்சியில் நலிந்த குடும்பத்தினை சார்ந்த ஒரு மாணவிக்கு வெ.ரா.கோணையன் கல்வி உதவித் தொகை வழங்கினார்.இறுதியில் சங்கத்தின் பொருளாளர் கௌசல்யா நன்றி கூறினார்.



