நாகப்பட்டினத்தில் உள்ள ஃபுரூடன் பெர்க் பயிற்சி மையத்தின் தலைவர் மற்றும் முதல்வராக பதவியை ஏற்றார் டாக்டர் சித்ரகலாமோகன்.
கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி பேரழிவைத் தொடர்ந்து, நாகப்பட் டினத்தில் ஃபுரூடன் பெர்க் பயிற்சி மையம் கட்டப்பட்டது. கடந்த 2009-ம் ஆண்டுஅதிகாரப் பூர்வமாக இந்த மையம் துவங்கப்பட்டது.
மையத்தின் முக்கிய குறிக்கோள், இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து நாட்டின் எதிர் காலத்துக்கு உதவும் தொழில் நுட்ப தொழிலுக்கு தயார்படுத்துவதாகும்.
ஜெர்மன் நாட்டின் தொழில் பயிற்சி முறையின் அடிப்படையில், ஒவ்வோர் ஆண்டும் 120 இளைஞர்கள் இந்த மையத்தில் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் வரை தொழில் முறை பயிற்சி பெறுகிறார்கள்.
இதுவரை 700-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வெல்டர்கள், ஃபிட்டர்கள், மெக்கானிக்குகள் (மோட் டார்வாகனம்) என தொழில் தொடங்க பயிற்சி பெற்றுள்ளனர்.
பல ஆண்டுகளாக இப்பயிற்சித் திட்டம் கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் அடிப்படையில், தொழிற் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளது.
ஃபுரூடன் பெர்க் மேலாண்மை வாரிய உறுப்பினரும், தலைமை மனிதவள அதிகாரியுமான எஸ்தர் லாய்ட்ஸ், “பெண்களின் தொழில் திறனை வளர்க்க நாங்கள் எந்த அளவுக்கு பாடுபடுகிறோமா, அந்த அளவுக்கு பயிற்சி மையமும் நற்பெயரைச் சம்பாதிக்கிறது. அதனால் நிறுவனத்துக்கும் பயன் கிடைக்கிறது” என்றார்.
ஃபுரூடன் பெர்க் மையத்தின் இந்தியாவுக்கான பிராந்திய பிரதிநிதி ஜார்ஜ்கிராஃப், சித்ரகலாவின் வெற்றிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.நாகப்பட்டினத்தில் உள்ள ஃபுரூடன் பெர்க் பயிற்சி மையம், எங் களது நிறுவனத்தின் மதிப்பீட்டிற்கு சிறந்த உதாரணம்.
ஒரு சிறந்த எதிர் காலத்திற்கான தொழிற்பயிற்சி மற்றும் வாழ்க்கைத் திறன்களை வழங்கும். ஒரு முன் மாதிரியாக திகழும் என்று அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்



