கோவை கிராஸ்கட் ரோட்டில் தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் புத்தம் புது பொலிவுடன் மிக பிரம்மாண்ட ஷோரூம் நேற்று(15.10.2021) துவங்கப்பட்டது.
இதனை டி.கே.சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் நிர்வாக இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
முதல் விற்பனையை கே.மாணிக்கம் தொடங்கி வைக்க அதனை இளங்கோவன், ஐஸ்வர்யா இளங்கோவன் பெற்றுக்கொண்டனர்.
திறப்பு விழா சலுகையாக கிராஸ்கட் ரோடு கிளையில் மட்டும் அக்டோபர் 15 முதல் 21 வரை பட்டு, ஜவுளி ரகங்களுக்கு 10% தள்ளுபடி, மேலும் தங்க நகைகள் பவுனுக்கு ரூ.1000 தள்ளுபடி மற்றும் வெள்ளிக் கொலுசு, மெட்டி, வெள்ளிப் பாத்திரங்களுக்கு செய்கூலி இல்லை, ஆன்டிக் வெள்ளிப் பாத்திரங்களுக்கு செய்கூலியில் 50% தள்ளுபடி, வைர நகைகளுக்கு வைரத்தின் விலையில் 25% தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த சிறப்பு விற்பனைக்காக எண்ணிலடங்கா ஆடை மற்றும் ஆபரணங்கள் ஷோரூமில் குவிக்கப்பட்டுள்ளன. இச்சிறப்பு ஏற்பாட்டை பொது மேலாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.



