fbpx
Homeபிற செய்திகள்பிகரோ பேபி மசாஜ் ஆயில் அறிமுகம்

பிகரோ பேபி மசாஜ் ஆயில் அறிமுகம்

இந்தியாவில் பெற்றோர்களிடையே மிகவும் விருப்பமான பிராண்டுகளில் ஒன்றான பிகரோ ஆலிவ் ஆயில், பிகரோ பேபி என்னும் புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தியது.

புதிய பிகரோ பேபி மசாஜ் ஆயில் மருத்துவ ரீதியாக பரிசோதிக்கப்பட்டு, சருமத்தின் ஈரப்பதத்தை மேம்படுத்துவதற்காக குழந்தைகளின் மென்மையான தோலுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எண்ணெய் மற்றும் பலவகையான இயற்கையான கலவையுடன் உருவாக்கப்பட்ட இந்த புதிய தயாரிப்பு குழந்தைகளின் சருமத்தை மேம்படுத்துவதுடன், மென்மையாக்குகிறது.

நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் சமீபத்தில் நடத்திய ஆய்வில் உலர் மசாஜ் செய்த குழந்தைகளைக் காட்டிலும் ஆலிவ் எண்ணெயால் மசாஜ் செய்யப்பட்ட குழந்தைகளுக்கு ஈரப்பதமான சருமம் இருப்பது தெரியவந்துள்ளது. குழந்தையின் ஆரம்ப காலங்களில் மசாஜ்கள் எப்போதும் ஒரு முக்கிய பகுதியாகும்.

இது தாய்க்கும் குழந்தைக்கும் இடையே வலுவான பிணைப்பை உருவாக்குவதுடன், குழந்தையின் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது.

நுகர்வோர் தேவைகளைப் பற்றிய ஆழமான புரிதலுடனும், அவர்களின் தேவைகளை மனதில் கொண்டும், பிகரோ குழந்தை பராமரிப்புக்கு வழி வகுக்கிறது.

பிகரோவின் சமீபத்திய தயாரிப்பு, ஆலிவ் எண்ணெய், செறிவூட்டப்பட்ட வைட்டமின் ஈ ஆகியவற்றால் செய்யப்பட்ட ஒரு தயாரிப்பு, பிறந்த குழந்தையின் தோல் பராமரிப்புத் தேவைகளை பூர்த்தி செய்கிறது. இதன் மூலம் குழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்கலாம்.

பிகரோ நிறுவனத்தின் மேலாளர் சிலாதித்யா சாரங்கி கூறுகையில், இந்தியாவில், பிகரோ ஆலிவ் எண்ணெய் நாடு முழுவதும் உள்ள நுகர்வோருக்குத் தொடர்ந்து விருப்பமான தேர்வாக உள்ளது. இப்போது பிகரோ பேபி கேரை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பிகரோ பேபி தயாரிப்பு, நுகர்வோர் மற்றும் தாய்மார்களின் பரந்த மக்கள்தொகையை அடைவதில் கவனம் செலுத்துகிறது. மசாஜ் ஆரோக்கிய நன்மைகளுக்காக மட்டுமல்லாமல், தலைமுறை தலைமுறையாக, குறிப்பாக இந்திய குடும்பங்களில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படுகிறது. பாரம்பரியமிக்க பிகரோ தனது புதிய வகை தயாரிப்புகள் மூலம் குழந்தைகளுக்கு சிறந்த பராமரிப்பை வழங்குகிறது என்றார்.

பிகரோ பேபி 100 ml , 200 ml மற்றும் 400 mlல் கிடைக்கும். முறையே ரூ.199, 375, 699 விலையில் கிடைக்கும்.

படிக்க வேண்டும்

spot_img