இந்தியாவின் முன்னணி நுகர்வோர் பராமரிப்பு கருவிகள் தயாரிப்பாளர்களான எல்ஜி எலக்ட்ரானிக்ஸ், புதிய தயாரிப்புகளை வெளியிட்டு, அதன் லைஃப்ஸ் குட் என்ற முழக்கத்திற்கு ஏற்ப செயல்படுகிறது.
புதிய வரிசையுடன் தரத்தை உயர்த்தியுள்ள சமீபத்திய தயாரிப்புகள் பிரீமியம் வாழ்க்கை முறைக்கு மேம்படுத்த அதிநவீன வடிவமைப்புகளுடன் வருகின்றன. இந்த வரம்பில் OLED-C2 டிவி, டாப் லோட், ஃப்ரண்ட் லோட் வாஷிங் மெஷின்கள், ட்ரையர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்த அறிமுகம் குறித்து தமிழகத்தின் ரீஜினல் பிசினஸ் ஹெட் கே.எல்.முரளி கூறியதாவது:
கிமி-டிரிவன் தொழில்நுட்பத்தின் வரம்பு வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை மிகவும் வசதியாகவும் உற்சாகமாகவும் மாற்றும் வகையில் அறிமுகம் செய்யப்படுகிறது. சமீபத்திய OLED-C2 சக்திவாய்ந்த புதிய அம்சங்கள் கொண்டுள்ளது மட்டுமல்லாமல் சந்தையில் சிறந்ததாக இருக்கும். வீட்டில் ஒரு சினிமா அனுபவத்தை அனுபவிக்க அதன் அதிவேக ஒலி ஒவ்வொரு பைசாவிற்கும் மதிப்பினை கொண்டுள்ளது.
இரண்டு புதிய TLWM மற்றும் FLWM வாஷர்கள் அதிக டிரம் திறனுடன் அறிமுகம் செய்யப்படுகின்றன மற்றும் AI டைரக்ட் டிரைவ் டெக்னாலஜி வாஷர்கள் பொருத்தப்பட்டிருப்பதால், வாடிக்கையாளர்களின் தொந்தரவில்லாத சலவைக்கு வழிவகுக்கும். புதிய ஹீட் பம்ப் ட்ரையர் அதன் ஒருங்கிணைந்த நுண்ணறிவுடன் கூடிய ஸ்மார்ட் உபகரணங்களின் வரிசையில் கூடுதலாக உள்ளது மற்றும் வாடிக்கையாளர் அதன் எக்கோ-ஹைபிரீட் தொழில்நுட்பத்துடன் நிலையான முடிவை எடுக்க அனுமதிக்கிறது” என்றார்.
அனைத்து புதிய எல்ஜி OLED-C2, டால்பி விஷன் மினி டால்பி அட்மோஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களுக்கு வீட்டிலேயே திரையரங்கு போன்ற அனுபவத்தை அளிக்கிறது. ரூ.189,990 என்ற விலையில் கிடைக்கிறது.
ஃப்ரண்ட் லோட், டாப் லோட் வாஷிங் மெஷின்களில் உள்ள எல்ஜி AI டைரக்ட் டிரைவ் சீரிஸ் ஆனது AI டைரக்ட் டிரைவ் டெக்னாலஜி மற்றும் எல்ஜி ThinQ ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பிந்தையது Wi-Fi உடன் இணைப்பதில் உதவுகிறது. இது சிறந்த சலவை செயல்திறனுடன் சலவையை மிகவும் வசதியாக்குகிறது.



