பழைய வாகனங்களை உபயோகத்தில் இருந்து நீக்கும் கொள்கையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தது வரவேற்கத்தக்கது.
தானியங்கி அடிப்படையிலான இந்த கொள்கை முடிவு குஜராத்தில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் வெளியிடப்பட்டது.
பழைய வாகனங்களை அழிப்பதன் மூலம் (ஸ்கிராப்) வெளிநாட்டில் இருந்து அதிகளவில் இரும்பு இறக்குமதி செய்வது குறையும்.
மேலும் பழைய வாகனங்களை உபயோகத்தில் இருந்து நீக்குவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு குறையும். பழைய வாகனங்களை அழிப்பதை செயல்படுத்துவதன் மூலம் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டு வாய்ப்புகள் உருவாகும்.
தனியார் வாகனங்களுக்கு இதை நடைமுறைப்படுத்துவது 2024ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும்.
குஜராத் மாநிலம் அலாஸ் பகுதியில் வாகனங்களை அழிக்கும் மையம் உருவாக்கப்பட்டு அது நாட்டின் முக்கியமான கேந்திரமாக விளங்கும்.
இந்தியாவின் வளர்ச்சி பாதையில் வாகன அழிப்பு கொள்கை மிக முக்கியமான மைல் கல்லாகும். ஸ்மார்ட் ஆர்ட் நிறுவனங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பும் உருவாகியுள்ளது.
பழைய வாகனங்கள் என்பதாலேயே அவற்றை அழிக்க வேண்டும் என்பதில்லை. சாலைகளில் ஓடுவதற்கேற்ற தகுதி நிலையில் அவை உள்ளனவா? என்பது சோதிக்கப்படும்.
இந்த சோதனையில் வெற்றி அடையாத வாகனங்கள் மட்டுமே அழிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அனைத்து மாவட்டங்களில் தனியார் பங்கேற்போடு வாகன தகுதி சோதனை மையங்கள் உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



