கோவை மண்டல அளவிலான பள்ளி மேலாண்மை குழுக்கான ஒருநாள் பயிற்சி, கே.பி. ஆர். கல்லூரியில் நடைபெற்றது. இப்பயிற்சியில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், உதவி திட்ட ஒருங்கி ணைப்பாளர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜனார்த்தனன் சிறப்புரையாற்றினார். கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதா வரவேற்றார். கருத்தாளர்களாக செல்வகுமார், மரியசூசை ஆகியோர் கலந்து கொண்டனர்.
பள்ளி மேலாண்மை குழுவின் தற்போதைய நிலை மற்றும் அவற்றை வளப்படுத்துதல், இன்றைய சூழலில் குழந்தைகளும் பள்ளியும் கோவிட்-19 பேரிடருக்கு பின் அதிகரித்து வரும் குழந்தை திருமணம், பள்ளி இடைநிறுத்தம், மற்றும் பல்வேறு விதமான குழந்தைகள் சார்ந்த சிக்கல்களும், பள்ளி மேலாண்மை குழுவின் தொடர்பும் அதைச்சார்ந்த பள்ளி மேலாண்மை குழு சம்மந்தமான அரசு ஆணைகள், பள்ளிக் கல்வித்துறையின் கடிதங்கள்.
பள்ளிக் கல்வியுடன் தொடர் புடைய பிற துறைகளை ஒருங்கிணைத்தல், பள்ளி மேலாண்மை குழுவும் பள்ளி வளர்ச்சி திட்டம் தயாரித்தல், பள்ளி மேலாண்மை குழு அனைத்து பள்ளி களிலும் உருவாக்குவதில் நமது பங்கும் திட்டமிடலும் சார்ந்து இப்பயிற்சி நடை பெற்றது.
பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற் றோர்களை பள்ளி வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத் துவதற்கான முன்னெடுப்புகளை கல்வித்துறையோடு இணைந்து செயல்படுத்துவார்கள்.
கே.பி.ஆர். கலை அறிவியல் கல்லூரி முதல்வர் எஸ்.பாலுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



