fbpx
Homeபிற செய்திகள்பயர்பேர்ட் இன்ஸ்டிடியூட் ஆப் ரிசர்ச் இன் மேனேஜ்மென்ட்டின் வேலைவாய்ப்பு முகாம்

பயர்பேர்ட் இன்ஸ்டிடியூட் ஆப் ரிசர்ச் இன் மேனேஜ்மென்ட்டின் வேலைவாய்ப்பு முகாம்

ஃபயர்பேர்ட் இன்ஸ்டிடியூட் ஆப் ரிசர்ச் இன் மேனேஜ்மென்ட் சார்பில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டதாரி, முதுகலை மற்றும் பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களை அழைக்கும் ஒரு நாள் வேலைவாய்ப்பு கண்காட்சி நடந்தது.

மாற்று வாய்ப்புகளை சரிபார்க்க விரும்பும், பணிபுரியும் நிபுணர்களுக்காகவும் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. சுமார் இரண்டாயிரம் மாணவர்கள் கண்காட்சியில் கலந்து கொண்டனர். நிகழ்வின் முடிவில், சுமார் எழுநூறு மாணவர்கள் நியமனக் கடிதங்களுடன் மகிழ்ச்சியுடன் வெளியேறினர்.

மெஸ்ஸர் கட்டிங் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட், குவாட்ரா சிஸ்டம்ஸ்.நெட் இந்தியா பிரைவேட் லிமிடெட், இன்ஃபோசிஸ், ஃபோகஸ் எடுமேடிக்ஸ், பஜாஜ் கேபிடல், ஹெச் டிஎஃப்சி, சாவியோ இந்தியா லிமிடெட், வயர்டெல்டா லிமிடெட், பிக் பாஸ்கெட் போன்றவை வளாகத்திற்கு வந்த சில முக்கிய நிறுவனங்கள் ஆகும். ஃபயர்பேர்ட் இன்ஸ்டிடியூட் ஆப் ரிசர்ச் இன் மேனேஜ் மென்ட்டின் மாணவர்களால், அவர்களின் சமூக ஆதரவு முன்முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த முயற்சி திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

ஃபயர்பேர்டில், மாணவர்களின் முழுமையான வளர்ச் சியில் கவனம் செலுத்துகிறோம். இந்த கவனம்தான் எங்கள் மாணவர்களுக்கு சமூகத் தேவைகளைப் புரிந்து கொள்ளவும், விழிப் புடன் இருக்கவும் உதவுகிறது.

சமுதாய நலனுக்காக எதிர்காலத்தில் இதுபோன்ற பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img