fbpx
Homeபிற செய்திகள்பன்னிமடை அமிர்த விலாஸ் குடியிருப்பில் சுதந்திர தின விழா

பன்னிமடை அமிர்த விலாஸ் குடியிருப்பில் சுதந்திர தின விழா

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி, ராயல் லயன்ஸ் சங்கம், நேரு நகர் லயன்ஸ் சங்கம், FAIRA, கலாம் மக்கள் அறக்கட்டளை இணைந்து 75-வது சுதந்திர தின விழாவை கோவை பன்னிமடை அமிர்த விலாஸ் குடியிருப்போர் வளாகத்தில் கொண்டாடியது.

வட்டாரத் தலைவர் எஸ். செந்தில்குமார் தலைமை தாங்கினார். ராயல் லயன்ஸ் சங்கத் தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, விபி சசிகுமார்,நேரு நகர் லயன்ஸ் சங்கச் செயலாளர் வி. மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். FAIRA தேசிய அமைப்புச் செய லாளர் நேரு நகர் நந்து கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.

கோவை மாநகர தலைமை காவலர் போத்திராஜி-ன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக ரூ.50 ஆயிரம் அவர் மனைவியிடம் வழங்கப்பட்டது.பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு படிக்கும் தர்ஷினி, சிவலிங்கம் இரு மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

லயன் ஆர்.ஆர்.தியாகராஜன், லயன் மாணிக்கம், லயன் முருகேஷ், லயன் பிரேம்குமார், லயன் மோகன்ராஜ், குருட ம்பாளையம் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img