fbpx
Homeபிற செய்திகள்நோக்கியா சி20 ப்ளஸ் அறிமுகம்

நோக்கியா சி20 ப்ளஸ் அறிமுகம்

நோக்கியா போன்களின் தாயகமான ஹெச்எம்டி குளோபல், அதிகளவில் பிரபலமாகியுள்ள நோக்கியா சி-சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் ஒரு பகுதியாக, இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ உடனான பிரத்யேக கூட்டுச் செயல்பாட்டுடன் நோக்கியா சி20 ப்ளஸ்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மிக மலிவான, எளிதாகப் பயன்படுத்தக்கூடிய நோக்கியா ஸ்மார்ட்போன்களாக விளங்கும் நோக்கியா சி-சீரிஸ் ஜியோ பிரத்யேகத் திட்டத்தில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான சலுகையுடன் கிடைக்கிறது, அதாவது, குறைந்தபட்ச ஆதரவு விலையாக 10 சதம் அல்லது ரூ.1,000 உடன் அதிகளவில் பலன்களைப் பெறலாம்; இவ்விரண்டில் எது குறைவானதோ அதனைப் பெற முடியும்.

வரவிருக்கும் பண்டிகைக் காலத்தையொட்டி, ஜியோ பிரத்யேகத் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.4,000 மதிப்புள்ள பலன்களையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.
ஹெச்எம்டி குளோபல், துணைத்தலைவர், சன்மீத் சிங் கோச்சார் கூறியதாவது:

ஆயுளுக்கான உத்தரவாதத்தினால் இவற்றை நீண்ட காலத்துக்கு வைத்திருக்க முடியுமென்பதால், பாதுகாப்பான முறையில் இணைப்பில் இருக்க இதன் மீது நம்பிக்கை வைக்கலாம்.

தனது நேர்த்தியான வடிவமைப்பு, வெற்றிக்கான அம்சங்கள், நுகர்வோரின் கைகளில் நிலைத்திருப்பதற்கான தரம் நோக்கிய அர்ப்பணிப்புதான் நோக்கியா சி-சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் சாராம்சம்; இன்று நோக்கியா சி20 ப்ளஸ்ஸை அறிமுகப்படுத்துகிறோம்.

ஜியோவின் பிரத்யேக சலுகையையும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். புதிய சி-சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இச்சலுகை மிக மலிவானதாக ஆக்குவதோடு, ஜியோ மற்றும் நோக்கியா பயனர்களுக்கு இரு தரப்பிலும் அனைத்துவகையிலும் வெற்றி மதிப்பை கிட்டச் செய்யும் என்றார்.
இந்தியாவில் கடல் நீலம், அடர் சாம்பல் வண்ணங்களில், 2/32ஜிபி மற்றும் 3/32ஜிபி செயல்பாட்டு அமைப்புடன், நோக்கியா சி20 ப்ளஸ் ரூ.8999 மற்றும் ரூ.9999 விலையில் சில்லறை விற்பனையகங்களில் நேரடியாகவும் இ-வர்த்தக தளங்கள், நோக்கியா.காம் இணையதளத்திலும் கிடைக்கும்.

சுயபதிவு முறையை பின்பற்றினால் 15 நாட்களுக்குள் சாதனத்தை ஆக்டிவேட் செய்து, சுயபதிவு செய்த 30 நிமிடங்களில் யூபிஐ மூலமாக வாடிக்கையாளரின் வங்கி கணக்கிலேயே ஆதரவு விலை பலன்களை பெறலாம்.

படிக்க வேண்டும்

spot_img