fbpx
Homeபிற செய்திகள்நியூ கேம்ரி ஹைபிரிட் அறிமுகம்

நியூ கேம்ரி ஹைபிரிட் அறிமுகம்

ஆற்றல், சொகுசு, ஸ்டைல் மற்றும் அழகு அம்சங்கள் நிறைந்த நுண்ணறிவான செடான் கார் என்று அறியப்படும் நிலையில், புத்துணர்வூட்டும் வடிவமைப்பு மாற்றங்களைச் செய்து, நியூ கேம்ரி ஹைபிரிட் அறிமுகம் செய்யப்படுவதை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (ஜிரிவி) அறிவித்திருக்கிறது.


இக்காரின் வெளிப்புறத்தில், புதிய வடிவமைப்பிலான முன்புற பம்பர், கிரில் மற்றும் அலாய் வீல்கள், கேம்ரி ஹைபிரிட்-ன் திடகாத்திரமான மற்றும் நவீன தோற்றங்களை இன்னும் நேர்த்தியாக மேம்படுத்துகின்றன.


மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள இன்ஸ்ட்ருமென்ட் பேனலுக்கு இன்னும் அழகு சேர்க்கும் வகையில் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆப்பிள் கார்பிளே இணக்க நிலை கொண்ட 9 அங்குலம் என்ற பெரிய அளவிலான ஃப்ளோட்டிங் வகையிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

ஒரு காம்போசிட் பேட்டர்ன் உடன் கருப்பு நிறத்திலான இன்ஜினி யர்டு உட்எஃபெக்ட் பிலிம் வழியாக உட்புற அலங்கார வடிவமைப்பும் புத்துணர்வூட்டும் தோற்றத்தைப் பெற்றிருக்கிறது.

பிரபலமான செல்ஃப் சார்ஜிங் வசதிகொண்ட இந்த ஹைபிரிட் எலெக்ட்ரிக் செடான் பிளாட்டினம் ஒயிட் பேர்ல், சில்வர் மெட்டாலிக், கிராஃபைட் மெட்டாலிக், ரெட் மைக்கா, ஆட்டிடியூட் பிளாக், மற்றும் பேர்னிங் பிளாக் என்ற ஏற்கனவே இருந்துவரும் வண்ணங்களோடு, மெட்டல் ஸ்ட்ரீம் மெட்டாலிக் என்ற புதிய வெளிப்புற நிறத்திலும் கிடைக்கிறது. டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்-ன் விற்பனை மற்றும் முக்கிய சந்தையாக்கல் பிரிவின் துணைத் தலைவர் அதுல் சூட் கூறியதாவது: சிறப்பான டிரைவிங் அனுபவத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் நியூ கேம்ரி ஹைபிரிட், ஆற்றல், சொகுசு வசதியின் வியக்க வைக்கும் ஒருங்கிணைப்பாகும்.

சுயமாக சார்ஜிங் செய்து கொள்ளும் ஹைபிரிட் தொழில்நுட்பமானது, மிகப்பிரமாதமான செயல்திறன், ஆக்ஸிலரேஷன், மிகக் குறைவான மாசு உமிழ்வு ஆகியவற்றின் தனிச்சிறப்பான கலவையை வழங்குவதால், பசுமையான மற்றும் நிலைக்கத்தக்க எதிர்காலத்தை உறுதி செய்வ தற்கென வடிவமைக்கப் பட்டிருக்கிறது.


வடிவமைப்பு மற்றும் சொகுசு அம்சங்களினால் நியூ கேம்ரி ஹைபிரிட் இன்னும் எண்ணற்ற நபர்களை தன்வசம் ஈர்க்கும் என்று நம்புகிறோம். 2013-ம் ஆண்டில், அறிமுகம் செய் யப்பட்டதிலிருந்து கேம்ரி ஹைபிரிட், இந்திய சந்தையில் வலுவான இடத்தை தனக்கென நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img