நீலகிரி மாவட்டம், உதகை – கோத்தகிரி கோடப்பமந்து பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், தமிழகத்தில் முதல் முறையாக நவீன தொழில் நுட்பத்துடன் மண்சரிவை தடுத்தல் – மண் ஆணி பொருத்தி நீர் விதைக்கும் முறையினை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் முன்னிலையில் இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
உடன் மாவட்ட கலெக்டர் அம்ரித், நெடுஞ்சாலைத்துறை தலைமைச் பொறியாளர் சந்திரசேகர், தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் பாலமுருகன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.



